Tennis Player Arrested:பெண்ணை பாலியல் தொழிலாளி என குறிப்பிட்டு போஸ்டர்.. பிரான்ஸில் இருந்து திரும்பிய டென்னிஸ் வீரர் கைது!
Tennis Player Arrested: டென்னிஸ் வீரர் மாதவின் காமத், அகமதாபாத்தில் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tennis Player Arrested: அகமதாபாத்தை சேர்ந்த சர்வதேச அளவில் புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் மத்வின் காமத் நேற்று அகமதாபாத் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்திய விளையாட்டு உலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
21 வயது இளம்பெண்ணின் புகைப்படத்தை பாலியல் தொழிலாளி என்று மத்வின் சமூக வலைதளங்களில் பதிவிட்ட இந்த கைதுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டபோது மத்வின் பிரான்சில் ஒரு போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தார்.
கடந்த சனிக்கிழமை இரவு மத்வின் பிரான்சிஸ் இருந்து மும்பை திரும்பியபோது லுக் அவுட் நோட்டீஸின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இது தொடர்பாக அகமதாபாத் சைபர் கிரைம் பிரிவு விசாரணையை தொடங்கியுள்ளது.
என்னதான் நடந்தது..? ஏன் கைது..?
கடந்த ஏப்ரல் 1ம் தேதி 21 வயது இளம்பெண்ணின் மொபைல் எண்ணுக்கு தொடர்ந்து கால்கள் வந்துள்ளது. இதை எடுத்தபோது ஒரு சிலர் இவரை பாலியல் தொழிலாளி என குறிப்பிட்டு தொடர்பு கொண்டுள்ளனர். மேலும், ஒரு குறிப்பிட்ட பகுதி முழுவதும் யாரோ ஒருவர் தன் புகைப்படம் இருக்கக்கூடிய போஸ்டரை ஒட்டி அதில் தனது நம்பரை குறிப்பிட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியாகியுள்ளார்.
இதையடுத்து, அந்த பெண் காவல்துறையினரை தொடர்பு கொண்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார். விஷயத்தின் தீவிரத்தை அறிந்துகொண்ட காவல்துறையினர் உடனடியாக விசாரணையை தொடங்கினர். அப்போதுதான், ஒரு அதிர்ச்சிகரமான விஷயம் வெளிவந்துள்ளது.
டென்னிஸ் வீரருக்கு இதற்கும் என்ன தொடர்பு..?
நகரங்கள் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். இதில், சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் பைக் ஓட்டு வந்துள்ளார். பைக் பெண் மற்றும் அவரது முக வடிவமைப்பை வைத்து ஆராய்ந்துள்ளனர். அப்போதுதான் அவர், போபால் ஆம்ப்லி சாலையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் டென்னிஸ் வீரர் மத்வின் காமத் என அடையாளம் காணப்பட்டது. அந்த நேரத்தில் மத்வின் காமத் பிரான்சில் ஒரு போட்டியில் விளையாட சென்றிருந்தார். இதையடுத்து அவர் தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
அதன் அடிப்படையில் மும்பை வந்ததும் மத்வின் காமத் அதிகாரப்பூர்வமாக கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணைக்காக அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், அந்த பாதிக்கப்பட்ட பெண்ணும், மத்வின் காமத்தும் நண்பர்கள் என்று தெரியவந்துள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட ஏதோ ஒரு தகராறில் அந்த பெண்ணின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து டவுன்லோட் செய்து எண் அடங்கிய போஸ்டரை நகரம் முழுவதும் ஒட்டியுள்ளார். பழிவாங்கும் நோக்கில் மத்வின் செய்த இந்த மோசமான செயல், தற்போது அவரது டென்னிஸ் கெரியரையே முடக்கியுள்ளது.
நிராகரிக்கப்பட்ட ஜாமீன்:
ஏப்ரல் மாதம், மத்வின் மீது பாலியல் துன்புறுத்தல், ஒரு பெண்ணின் கண்ணியத்தை சீற்றம் செய்யும் நோக்கம் மற்றும் ஒருவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகை என 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சைபர் கிரைம் போலீசார் கைது செய்ததையடுத்து, மத்வின் காமத்தின் ஜாமீன் மனுவை நீதிபதி நிராகரித்துள்ளார்.
மற்றொரு ஊடகச் செய்தியில், வணிக விஷயங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, இந்திய டென்னிஸ் வீரர் மத்வின் காமத், இந்தப் பெண்ணின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது.