மேலும் அறிய

IPl yorker king Natarajan | ’ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுகிறேன்..’ - ஃபீல் செய்த நடராஜன்..

ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக தான் விலகுவதாக ‘யார்க்கர் கிங்’ நடராஜன் மிகவும் வேதனையுடன் கூறினார். நடராஜன் விலகியது ஹைதராபாத் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் லீக் ஆட்டங்கள் சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்று வருகின்றன. இந்த சீசனில் 15 லீக் போட்டிகள் முடிந்துள்ளன. இந்தத் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பிறகு நடைபெற்ற ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை. லேசான காயத்தால் அவர் விளையாடவில்லை என்று அணி நிர்வாகம் தெரிவித்தது.

🗣️ "I'm sad to miss the remaining games this season."@Natarajan_91 has been ruled out of the tournament due to injury and we along with the entire squad wish him a speedy recovery 🧡#OrangeOrNothing #OrangeArmy #IPL2021 pic.twitter.com/b4mzS3Rfrp
— SunRisers Hyderabad (@SunRisers) April 23, 2021

இந்நிலையில், நடராஜனுக்கு கால் மூட்டில் ஏற்பட்ட காயத்தால், அவர் நடப்பு தொடரில் இருந்து விலகியுள்ளதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. தற்போது, இந்தத் தகவலை நடராஜனே உறுதிப்படுத்தியுள்ளார்.

IPl yorker king Natarajan | ’ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுகிறேன்..’  - ஃபீல் செய்த நடராஜன்..

இதுதொடர்பாக நடராஜன் கூறுகையில், “நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறேன். கால் மூட்டில் ஏற்பட்ட காயம், சிகிச்சை வரை வந்துள்ளது. இதன்காரணமாக தொடரில் இருந்து விலகுகிறேன். இந்த முறை இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாக மிகவும் ஆவலுடன் இருந்தேன். ஆனால், அது முடியாமல் போனது. ஹைதராபாத் அணி மற்றும் வீரர்கள், நிர்வாகிகள் என அனைவரையும் மிஸ் செய்கிறேன். ரொம்ப ஃபீலாக உள்ளது. இனி வரும் அனைத்து போட்டியிலும் ஹைதராபாத் அணி வெற்றி பெற வாழ்த்துகள்” என்று கூறினார்.

நடராஜன் விலகியுள்ளது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் நடராஜன் யார்க்கர் பந்துகளை வீசி தோனி, கோலி, டி வில்லியர்ஸ் உள்ளிட்ட பெரிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். இந்த தொடரின் மூலமே நடராஜனின் பந்துவீச்சு  திறமை வெளி உலகுக்கு தெரியவந்தது. அவரின் திறமையை அறிந்த, ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து அவரை மெருகேற்ற செய்தார்.

ஐபிஎல் தொடரில் ஜொலித்த காரணத்தால், நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம்பெற்றார். அது நெட் பவுலராக. ஆனால்,  சில வீரர்களின் காயத்தால், அவருக்கு T20, ஒருநாள் மற்றும் டி20 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டார் நடராஜன். மேலும், ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் அறிமுகமான ஒரே வீரர் என்ற சாதனையையும் நடராஜன் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Australian Open 2025: ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
"பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது" ஆளுநர் ரவி பேச்சு
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vivek Ramaswamy DOGE Resign : பதவியேற்ற TRUMP..BYE சொன்ன விவேக்! திடீர் TWISTJagabar Ali Murder : ’’அநியாயம் பண்றாங்க’’அதிமுக நிர்வாகி படுகொலைஇறக்கும் முன் கடைசி வீடியோKomiyam Drinking Fact Check | கோமியம் குடிச்சா நல்லதா?IIT காமகோடி Vs மனோ தங்கராஜ் உண்மை நிலை என்ன?Appavu walk out : ஆளுநர் ரவி சர்ச்சை அப்பாவு வெளிநடப்பு !பீகார் சபாநாயகர்கள் மாநாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Australian Open 2025: ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
"பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது" ஆளுநர் ரவி பேச்சு
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
SSC MTS Result 2024 OUT: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு வெளியானது.! கட் ஆஃப் எவ்வளவு ?
SSC MTS Result 2024 OUT: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு வெளியானது.! கட் ஆஃப் எவ்வளவு ?
துருக்கி ரிசார்ட்டில் தீ விபத்து - 66 பேர் பலி; 51 பேர் படுகாயம் - நடந்தது என்ன?
துருக்கி ரிசார்ட்டில் தீ விபத்து - 66 பேர் பலி; 51 பேர் படுகாயம் - நடந்தது என்ன?
துப்பாக்கி சுடும் பயிற்சி; எல்லை தாண்டி மீன் பிடிக்காதீங்க - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
துப்பாக்கி சுடும் பயிற்சி; எல்லை தாண்டி மீன் பிடிக்காதீங்க - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
பரந்தூரில் ஏர்போர்ட் - பயப்படாதீங்க: விடாப்பிடியாக விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு
பரந்தூரில் ஏர்போர்ட் - பயப்படாதீங்க: விடாப்பிடியாக விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு
Embed widget