மேலும் அறிய

Asian Games 2023: ஆசிய விளையாட்டுப் போட்டி- முதல் தங்கம் வென்ற இந்தியா, துப்பாக்கிச் சுடுதலில் உலக சாதனை

10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் உலக சாதனையை முறியடித்து, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது.

சீனாவில் நடைபெறும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. 10 மீட்டர் ஏர் ரைபிள் டீம் பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. 1893.7 மதிப்பெண்களுடன் இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. திவ்யான்ஷ் பன்வார், ஐஸ்வரி தோமர், ருத்ரன்காஷ் பாட்டீல் ஆகியோர் தங்கம் வென்று உலக, ஆசிய விளையாட்டு மற்றும் ஆசிய சாதனைகளை முறியடித்தனர்.  நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி வெல்லும் 7வது பதக்கம் இதுவாகும்.

போட்டி விவரம்:

10 மீட்டர் ஏர் ரைபிள் டீம் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா சார்பில், திவ்யான்ஷ் பன்வார், ஐஸ்வரி தோமர், ருத்ரன்காஷ் பாட்டீல் ஆகியோர் பங்கேற்றனர். இதில் ஒவ்வொரு அணிக்கும் 6 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதன்படி ஒவ்வொரு சுற்றிலும் இந்திய அணி முறையே, 313.7, 315.9, 313.7, 315.9, 318.7 மற்றும் 315.8 ஆகிய புள்ளிகளை பெற்றது. அதிகபட்சமாக 5வது சுற்றில் 318.7 புள்ளிகளும், தனிநபர் அதிகபட்சமாக  ருத்ரன்காஷ் பாட்டீல் ஐந்தாவது சுற்றில் 106.7 புள்ளிகளை பெற்றார். 6 வாய்ப்புகளிலும் சேர்த்து ருத்ராங்க்ஷ் பாட்டீல் 632.5 புள்ளிகளையும்,  ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 631.6 புள்ளிகளையும்,  திவ்யான்ஷ் சிங் பன்வார் 629.6 புள்ளிகளையும் குவித்தனர். இதன் மூலம் ஒட்டு மொத்தமாக 1893.7 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. தென்கொரிய அணி 1890.1 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், 1888.2 புள்ளிகளுடன் சீனா வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றின. 

மேலும் படிக்க: Asian Games Medal Tally: ஆசிய விளையாட்டு போட்டி - தங்கமாய் குவிக்கும் சீனா; இந்தியாவின் நிலை என்ன? பதக்கப் பட்டியல் விவரம் இதோ

உலக சாதனை முறியடிப்பு:

முன்னதாக, அண்மையில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், சீன அணி 1893.3 புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. தற்போது வரை அது தான் உலக சாதனையாக இருந்தது. இந்நிலையில், சீனாவை விட கூடுதலாக 0.4 புள்ளிகளை பெற்ற இந்திய அணி, 10 மீட்டர் ஏர் ரைபிள் டீம் பிரிவில் புதிய உலக சாதனை படைத்துள்ளது. அதோடு, இதே பிரிவில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஏற்கனவே இருந்த சாதனையையும் இந்தியா தகர்த்துள்ளது. துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் மேலும் சில பதக்கங்களை வெல்லும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget