India vs Wales Hockey: காமன்வெல்த் ஆடவர் ஹாக்கி ஹர்மன்பிரீத் ஹாட்ரிக் கோல் .. அரையிறுதிக்கு முன்னேறி அசத்திய இந்தியா
காமன்வெல்த் போட்டிகளில் ஆடவர் ஹாக்கி பிரிவில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
காமன்வெல்த் போட்டிகளில் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்திய அணி முதல் போட்டியில் கானா அணியை 11-0 என்ற கணக்கில் வென்றது. அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியை இந்திய அணி 4-4 என்ற கணக்கில் டிரா செய்தது.
இந்நிலையில் இன்று இந்திய அணி தன்னுடைய நான்காவது குரூப் போட்டியில் வேல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் முதல் கால்பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. அதன்பின்னர் இரண்டாவது கால்பாதியில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஹர்மன்பிரீத் சிங் முதல் கோலை அடித்தார். அதன்பின்னர் இந்திய அணி மேலும் ஒரு கோலை அடித்தது. இதன்காரணமாக இரண்டாவது கால் பாதியின் முடிவில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்று இருந்தது.
News Flash:
— India_AllSports (@India_AllSports) August 4, 2022
Men's Hockey: India advance to Semis with 4-1 win over Wales in their final Group match.
👉 Harmanpreet scored a hattrick.
👉 India finish their Group stage with 10 points (3 wins & a draw). India likely to top their Group #CWG22 #CWG2022India pic.twitter.com/jkc3ip5Zza
இதைத் தொடர்ந்து மூன்றாவது கால்பாதியில் இந்திய அணிக்கு ஒரு பெனால்டி ஸ்டோர்க் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்திய இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் மேலும் ஒரு கோலை அடித்தார். இந்தியா அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. கடைசி கால்பாதியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணி 4வது கோல் அடித்தது. வேல்ஸ் அணி கடைசி கால்பாதியில் ஆறுதல் கோல் ஒன்றை அடித்தது. இறுதியில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது. அத்துடன் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.
இந்திய அணி தன்னுடைய குரூப் பிரிவு போட்டிகளில் 3 வெற்றி மற்றும் ஒரு டிரா என மொத்தமாக 10 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்திய அணி குரூப் ஏவில் முதலிடம் பிடிக்கும் பட்சத்தில் நியூசிலாந்து அல்லது தென்னாப்பிரிக்கா அணியுடன் விளையாடும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்