(Source: ECI/ABP News/ABP Majha)
Ind vs Eng 1st Test: விவேகம்... விஸ்வாசம்... வலிமை... இங்கிலாந்தை பந்தாடிய இந்தியாவின் டாப் 3 மொமெண்ட்ஸ்!
டெஸ்ட் கிரிக்கெட் போல நின்று ஆடாமல், ஒரு நாள் கிரிக்கெட் போல முதல் நாள் ஆட்டம் முடிவதற்குளாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி, 183 ரன்கள் எடுத்து வெளியேறியது.
இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு பிறகு இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. மழை ஏதும் போட்டியை குறுக்கிடாமல், ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் நடந்து முடிந்தது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதல் ஓவரிலேயே அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பெர்ன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்களின் அசத்தலான பெளலிங்கால் இங்கிலாந்து அணி ரன் எடுக்காமல் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. டெஸ்ட் கிரிக்கெட் போல நின்று ஆடாமல், ஒரு நாள் கிரிக்கெட் போல முதல் நாள் ஆட்டம் முடிவதற்குளாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி, 183 ரன்கள் எடுத்து வெளியேறியது.
England are all out for 183!
— ICC (@ICC) August 4, 2021
Jasprit Bumrah picks up the last wicket of James Anderson, and finishes with an impressive 4/46 👏#ENGvIND | #WTC23 | https://t.co/HOyTN16tXL pic.twitter.com/rzQnZGJBGf
பும்ராவின் கம்பேக்!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பும்ராவின் பர்ஃபாமன்ஸ் சுமாராக இருந்தது. முக்கியமான போட்டிகளில், இந்தியாவின் டிரம்ப் கார்டாக இருப்பவர் பும்ரா. நேற்றைய போட்டியில் அப்படி ஒரு பர்ஃபாமென்ஸை கொடுத்து மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் கூட்டணியான பும்ரா, ஷமி இணைந்து, 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் எடுத்தனர். தேநீர் இடைவேளைக்கு பிறகு இங்கிலாந்து அணியின் வீரர்கள் அடுத்ததடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பட்லர் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லரை பெவ்லியினுக்கு அனுப்பியது முதல் இன்னிங்ஸின் இரண்டாம் பாதியில் இங்கிலாந்துக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இதனால், ஸ்கோர் குறைவாக பதிவானது.
ஷர்துல் தாக்கூரின் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள்
☝️ Joe Root
— ICC (@ICC) August 4, 2021
☝️ Ollie Robinson
Shardul Thakur strikes twice in an over ⚡️#ENGvIND | #WTC23 | https://t.co/HOyTN16tXL pic.twitter.com/T8swJA35BZ
நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் ஒரே நம்பிக்கையாக இருந்தவர், கேப்டன் ஜோ ரூட். இந்தியாவின் பெளலிங்கை சமாளித்து களத்தில் நின்ற அவர், 50+ ரன்களை ஸ்கோர் செய்திருந்தார். போட்டியின் 58வது ஓவரின்போது, ஷர்துல் வீசிய ஓவரில், ஜோ ரூட், ஓலி ராபின்சன் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. ஜோ ரூட்டின் விக்கெட்டிற்கு பிறகு, இங்கிலாந்து அணி இன்னும் தடுமாறியது. இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகளும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளும் ஷர்தல் தாக்கூர் 2 விக்கெட்களும், சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்.
ரிஷப் பண்ட் டைமிங் ரிவ்யூ
RRS - Rishabh Pant Review System😎 #ENGvsIND pic.twitter.com/pD3erfYtbx
— CricTracker (@Cricketracker) August 4, 2021
போட்டி நடந்து கொண்டிருந்தபோது, ட்விட்டரில் டிரெண்டானது ரிஷப் பண்ட்டும், ரிஷப் பண்ட்டின் ரிவ்யூ மீம்களும்தான். சிராஜ் வீசிய பந்தில், கேட்ச் கொடுத்தார் ஜாக் கிராலி. அப்போது நடுவர், விக்கெட் கொடுக்காதபோது, விராட் ரிவ்யூ கேட்கலாமா வேண்டாம என தயங்கினார். விராட்டை ஆசுவாசப்படுத்தி, ரிவ்யூ கேட்க வைத்தார் பண்ட். இதனால், ஜாக் கிராலிக்கு அவுட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். தோனி ரிவ்யூ சிஸ்டம் என நெட்டிசன்கள் சொல்லி வந்த பிறகு, இப்போது ரிஷப் ரிவ்யூ சிஸ்டம் என புகழ்ந்து வந்தனர். பேட்டிங். விக்கெட் கீப்பிங் என ஒவ்வொரு முறையும் கிரிக்கெட்டில் தன்னை மெருகேற்றிக் கொண்டிருக்கும் ரிஷப், ரசிகர்களின் நம்பிக்கையாகவும், ஃபேபரைட்டாகவும் முன்னேறி வருகிறார்.
இங்கிலாந்தை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு, ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் ஓப்பனிங் களமிறங்கினர். முதல் நாள் முடிவில், 13 ஓவர்கள் வீசிய நிலையில், விக்கெட் ஏதுமின்றி 21 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.