காமன்வெல்த் வரலாற்றின் முதல் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் மகளிருக்கான 20 ஓவர் கிரிகெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது வெற்றியை பதிவு செய்தது.
காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் மகளிருக்கான 20 ஓவர் கிரிகெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது வெற்றியை பதிவு செய்தது.
2022 ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் இந்தியா-ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி!
இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில், அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் 52 ரன்களும், ஷஃபாலி வர்மா 48 ரன்களும், ஸ்மிரிதி மந்தனா 24 ரன்களும் எடுத்து சிறப்பாக விளையாடினர்.
ஆஸ்திரேலியா வெற்றி:
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய, முதல் 10 ஓவர்களில் சற்று தடுமாறி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து நிதானாமாக ஆடத்தொடங்கிய ஆஸ்திரோலியா, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ரேனுகா சிங் மேக்னா சிங், ராஜேஷ்வரி கைக்வாட், தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ஹர்மன் ப்ரீத் கவுர் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மேலும், காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில், சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 500 ரன்கள் எடுத்த முதல் இந்திய அணியின் கேப்டன் என்ற பெருமையை பெற்றார் ஹர்மன்ப்ரீத் கவுர். இவர் 34 பந்துகளில் 52 ரன்கள் எடுத்துள்ளார். ‘காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்யும்’ என எதிர்பார்த்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.