Hockey World Cup 2023: உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகள் இவைதான்..!
Hockey World Cup 2023: உலகக்கோப்பை ஹாக்கியில் இதுவரை படைக்கப்பட்ட சாதனைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
Hockey World Cup 2023:
2023 FIH ஹாக்கி உலகக் கோப்பை இந்தியாவில், புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஹாக்கி நிர்வாகத்திற்கு இது மீண்டும் ஒரு பெரிய ஆண்டாக இருக்கப்போகிறது. இந்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை 15வது உலகக்கோப்பை போட்டியாகும். 16 நாடுகள் போட்டியிடும் நிலையில், ஒவ்வொரு அணியும் பட்டத்தை வெல்லும் அளவுக்கு வலிமையானவையாக உள்ளன.
இந்த உலகக்கோப்பை குறித்து சில சுவாரஸ்யங்கள்...
தொடர்ந்து அடுத்தடுத்து உலகக்கோப்பை போட்டிகளை நடத்தும் முதல் நாடு இந்தியா. இந்த முறை தான் போட்டி ஒரு நகரத்தில் மட்டும் நடத்தப்படாமல் இருக்கிறது. 1971 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு HWC தொடங்கியது, இந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தினை வென்றது. அப்போது இருபத்தி ஆறு நாடுகள் பங்கேற்றுள்ளன, அதே நேரத்தில் சிலி மற்றும் வேல்ஸ் ஆகியவை தகுதி பெற்றன.
அதிகமுறை சாம்பியன் ஆன அணி;
1971, 1978, 1982 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை வெற்றி பெற்று அதிக HWC பட்டங்களை வென்ற சாதனையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக நெதர்லாந்து உள்ளது, நெதர்லாந்து அணி 1973, 1990 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை வென்றுள்ளது.
Odisha is all set for a grand inaugural ceremony of FIH Hockey Men's World Cup 2023 in Cuttack. pic.twitter.com/wKV1RNSX5g
— ANI (@ANI) January 9, 2023
அதிக வெற்றி சதவீதம்;
ஆஸ்திரேலியா தனது 92 போட்டிகளில் 69 போட்டிகளில் வெற்றி பெற்று, போட்டியில் (75%) சிறந்த வெற்றி சதவீதத்தை பெற்றுள்ளது. அடுத்து ஜெர்மனி, 61.7%, 47ல் இருந்து 29 வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதிக போட்டிகளில் களமிறங்கிய அணி;
அதிக எண்ணிக்கையிலான போட்டிகளை விளையாடியதில், நெதர்லாந்து 100 போட்டிகளுடன் தரவரிசையில் முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து இந்தியா 95 போட்டிகளுடன் உள்ளது.
அதிக கோல் அடித்த அணி;
ஆஸ்திரேலியா இதுவரை 307 கோல்கள் அடித்துள்ளது. அந்த அணி ஒரு போட்டிக்கு 3.3 கோல்கள் என்ற விகிதத்தில் அதிக கோல்களை அடித்துள்ளது, அதற்கு அடுத்ததாக நெதர்லாந்து உள்ளது, நெதர்லாந்து அணி ஒரு போட்டிக்கு 2.67 என்ற விகிதத்தில் கோல் அடித்துள்ளது.
அதிக சேவிங் செய்த அணி;
ஒரு ஆட்டத்திற்கு 1.16 என்ற விகிதத்தில் வெறும் 107 ரன்களை விட்டுக்கொடுத்து மீண்டும் ஆஸ்திரேலியாதான் அதிக சேவ் செய்த அணிக்கான சாதனையைப் பெற்றுள்ளது.
அதிக முறை உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி அணி;
இந்தியா, நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய அணிகள் மட்டுமே இதற்கு முன்னர் நடைபெற்ற 14 உலகக்கோப்பைகளிலும் விளையாடியுள்ளன, அதே நேரத்தில் இந்த அணிகள் 15வது உலகக்கோப்பையிலும் விளையாட உள்ளனர். அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் 13 உலக்கோப்பை போட்டித் தொடர்களில் களமிறங்கி அடுத்த இடத்தில் உள்ளன.