மேலும் அறிய
Advertisement
Morning Wrap | 12.07.2021 - இன்றைய தலைப்புச் செய்திகள்
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
- மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
- முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் காலை நடக்கிறது.
- தமிழ்நாட்டில் இன்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய புதிய ஊரடங்கு விதிகள் அமல்
- காய்கறிகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள் என அனைத்து வகை கடைகளும் 9 மணி வரை செயல்பட அனுமதி
- தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரிக்கு மீண்டும் பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கியது
- புதிய ஊரடங்கு விதிகளின்படி, சென்னையில் மெட்ரோ ரயில் இன்று முதல் 10 மணி வரை இயக்கப்பட உள்ளது.
- பீக் ஹவர்ஸ்களில் 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டம்
- மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை
- தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் ஆகஸ்ட் 1 முதல் மாணவர் சேர்க்கையை தொடங்க திட்டம்
- தமிழ்நாட்டில் புதியதாக மேலும் 2 ஆயிரத்து 775 நபர்களுக்கு கொரோனா உறுதி
- கோவில்பட்டியில் யூ டியூப்பை பார்த்து வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி – உதவி மேலாளர் உள்பட 5 பேர் கைது
- புதுச்சேரியில் வரும் 16-ந் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறப்பு – முதல்வர் ரங்கசாமி உத்தரவு
- தமிழ்நாட்டில் வரும் 21-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் – தமிழக தலைமை காஜி அறிவிப்பு
- டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள தமிழக வீராங்கனை ரேவதிக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பாராட்டு
- கேரளாவில் ஏற்கனவே 15 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
- சமுதாயத்தின் அடிமட்டத்தில் தொண்டாற்றுபவர்களையும் பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கலாம் – பிரதமர் மோடி அறிவிப்பு
- இரு சக்கர வாகனங்களில் பிளக்ஸ் என்ஜின் பொருத்த திட்டம்
- உலகப்புகழ்பெற்ற பூரி ஜகன்னாதர் யாத்திரை இன்று தொடக்கம் – இரண்டாவது ஆண்டாக பக்தர்கள் இன்றி நடைபெறுகிறது.
- புதிய குறைதீர்க்கும் அதிகாரியை நியமித்தது டுவிட்டர் நிறுவனம்
- இந்தியாவில் ஒரே நாளில் 41 ஆயிரத்து 566 நபர்களுக்கு புதியதாக கொரோனா.
- கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 895 நபர்கள் கொரோனாவால் உயிரிழப்பு
- உத்தரபிரதேசத்தில் தீவிரவாத சதித்திட்டம் – பயங்கர ஆயுதங்களுடன் 2 பேர் கைது
- அமெரிக்காவின் மியாமி கட்டிட விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 90 ஆக உயர்வு
- விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்
- லண்டனில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இத்தாலி வீரரை வீழ்த்தி அபார வெற்றி
- ஜோகோவிச் இதன்மூலம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்று பெடரர், நடால் சாதனை சமன்
- யூரோ கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி : இங்கிலாந்தை வீழத்தி இத்தாலி அணி சாம்பியன்
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2024
தமிழ்நாடு
ஜோதிடம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion