(Source: ECI/ABP News/ABP Majha)
Hardik Pandya: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி... ஹர்திக் பாண்டியாவை தக்க வைத்த குஜராத் அணி!
Hardik Pandya: ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அவர் தற்போது குஜராத் அணியிலேயே தொடர்கிறார்.
2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள 17-வது ஐபிஎல் தொடருக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான மினி ஏலம் அடுத்த மாதம் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக அனைத்து அணிகளுக்கும் இடையில் வீரர்களை மாற்றிகொள்ள டிரேடிங் முறை நடைபெற்றது.
இதற்கான கடைசி நாளான நேற்று (நவம்பர் 25) பல்வேறு அணிகளும் டிரேடிங் முறையில் வீரர்களை பெற்றுக்கொள்ள தீவிரம் காட்டின. ஏனென்றால் ஐபிஎல் நிர்வாகத்திடம் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை ஒப்படைக்க இன்று (நவம்பர் 26) தான் கடைசி நாளாகும்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி:
இந்த நிலையில், குஜராத் அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியா, மீண்டும் மும்பை அணியில் விளையாட இருப்பதாக நேற்று முதல் தகவல் வெளியானது.
கடந்த 2 சீசன்களில் குஜராத் அணியை வெற்றிகரமாக வழிநடத்தியவர் ஹர்திக் பாண்டியா. இந்த நிலையில், கடந்த ஆண்டு சீசனுக்கு இடையிலேயே குஜராத் அணி உரிமையாளர்களுக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இதன் காரணமாக கடந்த சீசனின் போதே ஹர்திக் பாண்டியா மும்பை அணி நிர்வாகிகளை தொடர்புகொண்டதாகவும் தகவல்கள் கசிந்தன. இதனிடையெ அந்த வதந்திகளுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கபட்டுள்ளது.
குஜராத் அணியில் தொடரும் ஹர்திக் பாண்டியா:
இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி இன்று (நவம்பர் 26) அந்த அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், குஜாராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவே தொடர்கிறார். மேலும், டேவிட் மில்லர், முகமது ஷமி, சுப்மன் கில், மத்தேயு வேட், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல், அந்த அணியில் இருந்து உள்நாட்டு வீரர்களான யாஷ் தயாள், கே.எஸ்.பாரத், சிவம் மாவி, உர்வில் படேல், பிரதீப் சங்வான் ஆகியோரும் வெளிநாட்டு வீரர்களான ஓடன் ஸ்மித், அல்சாரி ஜோசப், தாசுன் ஷனகா ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை காண எப்படி கிரிக்கெட் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்தார்களோ அதைப்போலவே தற்போது ஐபிஎல் போட்டியை காண தீவிரம் காட்டி வருகின்றனர். வீரர்கள் எந்த அணியில் தக்க வைக்கப்படுகின்றனர், யார் விடுவிக்கப்படுகின்றனர் என்பதை காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க: SANJU SAMSON: “மக்கள் என்னை அதிர்ஷ்டம் இல்லாதவன் என்கிறார்கள்”- சஞ்சு சாம்சன் கடும் வேதனை!
மேலும் படிக்க: Rinku Singh: ரிங்குசிங்கின் இந்த அபார வளர்ச்சிக்கு காரணம் இவர்தான்! தினேஷ் கார்த்திக் சொன்ன ரகசியம்!