மேலும் அறிய

Happy Birthday Viswanathan Anand: 5 முறை உலக சாம்பியன்.. இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டர்.. விஸ்வநாதன் ஆனந்த் பிறந்தநாள் இன்று..!

இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இன்று தனது 54வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

ஐந்து முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் 2007 முதல் 2013 வரை ஆறு ஆண்டுகள் செஸ் உலகில் ஆதிக்கம் செலுத்தினார். இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இன்று தனது 54வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சிறந்த செஸ் வீரர்களில் ஒருவரான முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் டிசம்பர் 11, 1969 இல் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் பிறந்தார். தனது குழந்தை பருவத்தில், ஆனந்த் தனது தாய் விளையாடும் செஸ் விளையாட்டின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் விளையாட தொடங்கி, தனது ஆறு வயதில் விஸ்வநாதன் ஆனந்த் தனது தாயை எதிர்த்து விளையாடத் தொடங்கினார்.

இந்தநிலையில், அவரது 54வது பிறந்தநாளில், கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தின் சில சிறந்த சாதனைகளை இங்கே பார்க்கலாம்.

ஆரம்பகால சாதனைகள்: 

விஸ்வநாதன் ஆனந்த் தனது14 வயதில் தேசிய சப்-ஜூனியர் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். தொடர்ந்து, தனது 16 வயதில் தேசிய செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினர். அதன் பின்னர் அவர் உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். 

கிராண்ட்மாஸ்டர் பட்டம்:

உலக சதுரங்க சம்மேளனத்தால் (FIDE) சதுரங்கத்தில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டர் என்ற பட்டத்தை ஆனந்த் கடந்த 1988ம் ஆண்டு பெற்றார். 

உலக செஸ் சாம்பியன் பட்டங்கள்:

உலக செஸ் சாம்பியன்ஷிப் என்பது ஒவ்வொரு ஆண்டும் சிறந்த உலகளாவிய செஸ் வீரருக்கு மகுடம் சூட்டுவதற்கான போட்டியாகும். இந்தாண்டு பிரஞ்னாந்தாவை வீழ்த்தி கார்ல்சன் பட்டம் வென்றதை நம் யாராலும் மறக்க முடியாது. இதையே விஸ்வநாதன் ஆனந்த் கடந்த 2000, 2007, 2008, 2010 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் ஐந்து முறை பட்டத்தை வென்றார். இந்த காலக்கட்டத்தில் விஸ்வநாதன் ஆனந்த் யாராலும் வீழ்த்த முடியாத வீரராக ஜொலித்தார். 

செஸ் ஆஸ்கார் விருது:

உலகெங்கிலும் உள்ள செஸ் பத்திரிகையாளர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் சிறந்த உலக சதுரங்க வீரருக்கு வருடாந்திர செஸ் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. அதன்படி, விஸ்வநாதன் ஆனந்த் கடந்த 1997, 1998, 2003, 2004 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் ஐந்து முறை விருதை வென்றார். அதன் பின்னர் இந்த விருது சில காரணங்களால் நிறுத்தப்பட்டது.

FIDE ரேட்டிங் பட்டியல்: 

FIDE ரேட்டிங் பட்டியலில் (முன்னர் ELO-ரேட்டிங்) 2,800-ஐ முறியடித்த வரலாற்றில் ஆறு வீரர்களில் ஆனந்தும் ஒருவர். தொடர்ந்து கடந்த 2003 ம் ஆண்டு நான்காவது இடத்தில் இருந்த விஸ்வநாதன் ஆனந்த், கடந்த 2007 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முறையாக உலகின் நம்பர் ஒன் இடத்தை தன்வசமாக்கினார். 

விஸ்வநாதன் ஆனந்த் பெற்ற விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்:

  1. அர்ஜுனா விருது, 1985.
  2. பத்மஸ்ரீ, 1987.
  3. தேசிய குடிமக்கள் விருது, 1987.
  4. சோவியத் லேண்ட் நேரு விருது, 1987.
  5. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது (1991-1992).
  6. ஸ்போர்ட்ஸ்டார் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர், 1995.
  7. ஆண்டின் சிறந்த புத்தகம், 1998 ( மை பெஸ்ட் கேம்ஸ் ஆஃப் செஸ் புத்தகத்திற்காக வழங்கப்பட்டது)
  8. ஸ்போர்ட்ஸ்டார் மில்லினியம் விருது,
  9. 1998,2000 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது
  10. 2007 இல் பத்ம விபூஷன் விருது (விருது பெற்ற முதல் விளையாட்டு வீரர் இவரே.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
Embed widget