Macron comfort Mbappe: "வீரனே கலங்காதே..." உடைந்து நொறுங்கிய எம்பாப்பேவை தேற்றிய பிரான்ஸ் அதிபர்..!
உலகக்கோப்பையில் பிரான்ஸ் வெற்றிக்காக இறுதிவரை போராடிய எம்பாப்பேவை அந்த நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரன் ஆறுதல் கூறி தேற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கத்தாரில் நேற்று இரவு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் மகுடத்தை சூடப்போவது யார்? என்பதற்கான ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை அர்ஜெண்டினா அணி 4-2 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று அசத்தியது.
இந்த போட்டியில் அர்ஜெண்டினா அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருந்தது பிரான்ஸ் அணி என்று கூறுவதை காட்டிலும் எம்பாப்பே என்று கூறுவதுதான் மிகச்சரியாக இருக்கும். பிரான்ஸ் அணிக்காக போட்டி நேரத்தில் அடிக்கப்பட்ட 3 கோல்களையும் எம்பாப்பே மட்டுமே அடித்திருந்தார்.
போட்டியின் இறுதிவரை தங்களது நாட்டிற்காக கோப்பையை கைப்பற்ற தீவிரமாக போராடிய எம்பாப்பே, பிரான்ஸ் அணி தோற்றதால் மைதானத்திலே சுக்குநூறாக நொறுங்கிவிட்டார். 24 வயதே ஆன ஒரு இளம் வீரர் மைதானத்தில் நொறுங்கிய தருணத்தில் கால்பந்து ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர். இந்த போட்டியை நேரில் பார்க்க வந்த பிரான்ஸ் அதிபர் மெக்ரோன், பிரான்ஸ் அணியின் தோல்வியால் மிகுந்த வேதனை அடைந்தார்.
Macron consoles French football team after defeat to Argentina in FIFA World Cup final
— ANI Digital (@ani_digital) December 18, 2022
Read @ANI Story | https://t.co/0nBHPDnda7#EmmanuelMacron #France #KylianMbappe #FIFAWorldCup #FIFAWorldCupFinal pic.twitter.com/LH2Y5IO3wq
இருப்பினும், அவர் தன்னுடைய நாட்டின் வீரர்களை தேற்றினார். குறிப்பாக, மைதானத்திலே உடைந்து அழுத எம்பாப்பேவை சக வீரரைப் போல அருகிலே அமர்ந்து பிரான்ஸ் அதிபர் மெக்ரோன் தேற்றினார். மேலும், வீரர்களுக்கான பரிசளிப்பு விழாவிலும் மேடையில் தங்களது நாட்டு வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கி கவுரவித்த பிரான்ஸ் அதிபர் மெக்ரேனுக்கு ஆறுதல் கூறி தேற்றினார். பிரான்ஸ் அதிபர் மெக்ரோன் தன்னுடைய நாட்டு வீரர்களுக்கு ஆறுதல் கூறியதற்காக அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இதுதொடர்பாக, பிரான்ஸ் அதிபர் மெக்ரோன் கூறியதாவது, “ எம்பாப்பே ஒரு சிறந்த வீரர். அவர் மிகவும் இளமையான வீரர். நான் அவரிடம் கூறினேன். 24 வயதுதான் ஆகிறது. அவர்தான் உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்தவர். இதற்கு முன்பே உலகக்கோப்பையை வென்றுள்ளார். மற்றொரு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். எனக்கும் சோகமாகத்தான் உள்ளது. நான் அவரிடம் நீங்கள் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள் என்று கூறினேன். நான் போட்டியின் முடிவில் தோற்றாலும் வெற்றியின் அருகில் சென்றோம். இதுதான் விளையாட்டு” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Fiers de vous. pic.twitter.com/9RMjIGMKGU
— Emmanuel Macron (@EmmanuelMacron) December 18, 2022
இந்த போட்டியின் 79வது நிமிடம் வரை அர்ஜெண்டினா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இதனால், கண்டிப்பாக அர்ஜெண்டினா எளிதாக வென்று விடும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் பிரான்ஸ் அணியின் அசகாய சூரன் எம்பாப்பே 80வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஷாட்டில் அற்புதமான கோல் அடிக்க, அடுத்த நிமிடத்திலே மற்றொரு கோலையும் விளாச ஒட்டுமொத்த ஆட்டத்திலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. பின்னர், அளிக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் மெஸ்ஸி கோல் அடித்த சில நிமிடங்களில் எம்பாப்பே கோல் அடிக்க மீண்டும் 3-3 என்று சமனானது.
பின்னர், பெனால்டி ஷூட் அவுட்டை கோல் அடித்து பிரான்ஸ் அணிக்காக சிறப்பாக எம்பாப்பே தொடங்கினாலும், அடுத்தடுத்த வீரர்கள் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பை வீணடித்தனர். ஆனால், அர்ஜெண்டினா 4 வாய்ப்புகளையும் கோலாக்கி மகுடத்தை சூடினர்.