Hero Intercontinental Cup: ஒடிசாவில் தொடங்கிய ஹீரோ இன்டர்காண்டினென்டல் கோப்பை போட்டி - முதல்வர் நவீன் பட்நாயக் அளித்த உறுதி
Hero Intercontinental Cup: கால்பந்து போட்டி வளர்ச்சிக்கு நாங்கள் முழு ஆதரவு அளிப்போம் என இண்டர்காண்டினட்டல் கோப்பைக்கான தொடக்க போட்டியில் முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
Hero Intercontinental Cup: 2023 ஆம் ஆண்டுக்கான இண்டர்காண்டினல் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேற்று அதாவது ஜூன் 9ஆம் தேதி ஒடிசாவில் தொடங்கியது. இதில் இந்தியா, மங்கோலியா, லெபனான் மற்றும் வனுவாடு ஆகிய நாடுகள் களமிறங்கியுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ளும்.
ஹீரோ இன்டர்காண்டினென்டல் கோப்பைக்கான தொடக்க நிகழ்வில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கலந்து கொண்டார். புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் ஹீரோ இன்டர்காண்டினென்டல் கோப்பை 2023 வெள்ளிக்கிழமை அதாவது நேற்று, தொடங்கியதால், புவனேஸ்வர் நகரம் உற்சாகத்தில் மூழ்கியது. காரணம் இந்தியாவில் மற்ற மாநிலங்களை விடவும் ஒடிசா மாநிலத்தில்தான் ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகள் அதிகப்படியான மக்களால் விளையாடப்படும் மற்றும் விரும்பப்படும் விளையாட்டுகளாக உள்ளது. இந்திய தேசிய கால்பந்து அணி ஒடிசாவில் விளையாடுவது இதுவே முதல் முறை. இந்த முக்கியமான போட்டியில், முதல்வர் நவீன் பட்நாயக் கலந்து கொண்டு, இந்தியா மற்றும் மங்கோலியா அணிகளைச் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், இந்த விழாவில், AIFF (அனைத்து இந்திய கால்பந்து சம்மேளம்) தலைவர் கல்யாண் சௌபே, மற்றும் பொதுச் செயலாளர் டாக்டர் ஷாஜி பிரபாகரன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிக்கு முன்னர் பேசிய ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், "ஒடிசாவில் உள்ள மைதானங்களில் மிகவும் முக்கியமான மைதனாமான கலிங்கா ஸ்டேடியத்தில் மீண்டும் ஒரு தடகள கால்பந்து நிகழ்வை ஏற்பாடு செய்ததில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது இந்தியாவில் ஒரு முக்கிய கால்பந்து மையமாக தன்னை நிலைநிறுத்துவதற்கான ஒடிசாவின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. இதில் பங்கேற்கும் சர்வதேச அணிகள் ஒரு சிறந்த அனுபவத்தைப் பெறும் என்று நான் நம்புகிறேன். இந்த மைதானத்தில், ஒடிசாவைச் சேர்ந்த கால்பந்து ஆர்வலர்கள் விளையாட்டினை நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். ஒடிசாவைச் சேர்ந்த இளம் கால்பந்து வீரர்கள் தங்களது சீனியர் வீரர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள இந்த போட்டியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்" என்றார்.
மேலும், கால்பந்தாட்டத்தின் வளர்ச்சிக்கு முழு ஆதரவு அளிப்பதாக தலைவர் AIFF கல்யாண் சௌபேக்கு முதல்வர் உறுதியளித்தார். அதேபோல், ஹூரோ இண்டர்காண்டினல் கால்பந்து சாம்பியன்ஷிப்பை நடத்தியற்காக முதலமைச்சருக்கு ஷ் சௌபே நன்றி தெரிவித்ததோடு, மாநிலத்தில் கால்பந்து வளர்ச்சியில் மாநில அரசின் பங்கைப் பாராட்டினார்.
ஒடிசாவின் ஆர்வம்
ஒடிசா கடந்த சில ஆண்டுகளாக கால்பந்து வளர்ச்சியில் முதலீடு செய்து வருகிறது. FIFA 17 வயதுக்குட்பட்ட பெண்கள் உலகக் கோப்பை அக்டோபர் 2022 இல் வெற்றிகரமாக ஏற்பாடு செய்து நடத்தியது. குறிப்பாக கலிங்கா ஸ்டேடியத்தில் பல்வேறு தேசிய அளவிலான போட்டிகள் மற்றும் ISL (இந்தியன் சூப்பர் லீக்), IWL (இந்தியன் மகளிர் லீக்), சூப்பர் கோப்பை போன்ற லீக்குகளுக்கு நடத்தும் இடமாக உள்ளது. தேசிய இளைஞர் அணிகள் (18 மற்றும் 16 வயதுக்குட்பட்டவர்கள்) ஒடிசா அரசின் ஆதரவுடன் மிகச்சிறபாக விளையாடி வருவதும் குறிபிடத்தக்கது.