FIFA Worldcup: ஃபிபா உலகக்கோப்பை போட்டியில் எத்தனை குரூப்கள்.. எத்தனை அணிகள்..? முழு விவரம் உள்ளே
கால்பந்து தொடரில் பல நாடுகளில் லீக் தொடர்கள் நடத்தப்பட்டாலும், ஃபிபா உலகக் கோப்பை என்றதும் ஒட்டுமொத்த உலக கால்பந்து ரசிகர்களும் உற்று நோக்கும் ஒரே தொடர் இந்த தொடர் மட்டும்தான்.
கால்பந்து தொடரில் பல நாடுகளில் லீக் தொடர்கள் நடத்தப்பட்டாலும், ஃபிபா உலகக்கோப்பை என்றதும் ஒட்டுமொத்த உலக கால்பந்து ரசிகர்களும் உற்று நோக்கும் ஒரே தொடர் இந்த தொடர் மட்டும்தான்.
இந்த முறை கத்தாரில் நவம்பர் 20-ஆம் தேதி முதல் டிசம்பர் 18-ஆம் தேதி வரை கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளது.
மொத்தம் 32 அணிகள் பங்குபெறும் இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது, 29 நாட்கள் நடைபெறவுள்ளன. இதில் மொத்தம் 64 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது கத்தாரில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பை போட்டி இன்னும் ஒரே நாளில் தொடங்கவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மொத்தம் 8 குரூப்கள் பிரிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த அணிகள் எந்தெந்த குரூப்களில் இடம்பெற்றுள்ளன என்பதைப் பார்ப்போம்.
குரூப் ஏ பிரிவில் உலகக் கோப்பையை நடத்தும் கத்தார், ஈக்குவடார், செனகல் நெதர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
கத்தார்
போட்டியை நடத்தும் கத்தார் முதல் முறையாக உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. இந்த அணி, உலகக் கோப்பைப் போட்டிகளில் 2019 வரை காலிறுதிக்குக் கூட தகுதிபெற்றதில்லை. தற்போது அந்த அணியில் புதிய பயிற்சியாளராக ஸ்பெயினைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் 2019இல் கத்தார் சாம்பியனாகியுள்ளது.
இந்த முறை உலகக் கோப்பையை நடத்துவதால் அந்த அணி தாமாகவே உலகக் கோப்பையில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது. ஃபிபா தரவரிசையில் கத்தார் 50 ஆவது இடத்தில் உள்ளது. ஹசன் ஹல் ஹேடோஸ் கத்தார் அணியின் கேப்டன் ஆவார்.
குரூப் பி
குரூப் பி பிரிவில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து, ஈரான், யுஎஸ்ஏ, வேல்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இங்கிலாந்து
சர்வதேச தரவரிசையில் 5ஆவது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி, இதற்கு முன்பு 15 முறை உலகக்கோப்பை போட்டியில் களம் கண்டுள்ளது. 1966 இல் சொந்த மண்ணிலேயே சாம்பியன் ஆனது.
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹேரி கேன் ஆவார்.
வேல்ஸ்
64 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலகக் கோப்பை போட்டியில் இடம்பெற்றுள்ள வேல்ஸ் அணி. வேல்ஸ் அணி, இங்கிலாந்தின் ஆளுகைக்குள்பட்ட ஒரு நாடாகும். கெரத் பேல் இந்த அணியின் கேப்டன் ஆவார்.
குரூப் சி
குரூப் சி பிரிவில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டீனா இடம்பெற்றுள்ளது. இதேபிரிவ்ல, சவுதி அரேபியா, மெக்ஸிகோ, போலந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. அர்ஜென்டீனா அணி இரு முறை (1978, 1986) உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்த அணியை நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி. அர்ஜென்டீனா அணி சர்வதேச தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ளது.
குரூப் டி
இந்தப் பிரிவில் பிரான்ஸ், டென்மார்க், துனிசியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
2018ஆம் ஆண்டு பிரான்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் ஆனது. அடுத்ததாக 1998 ஆம் ஆண்டிலும் சாம்பியனாகியுள்ளது. 3வது முறையாக சாம்பியன் ஆகும் முனைப்புடன் அந்த அணி விளையாடவுள்ளது. ஹியுகோ லோரிஸ் தான் அந்த அணியின் கேப்டன் ஆவார்.
குரூப் ஈ
இந்தப் பிரிவில் ஸ்பெயின், ஜெர்மனி, ஜப்பான், கோஸ்டா ரிகா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஸ்பெயின் அணி தரவரிசையில் 7ஆவது இடத்தில் உள்ளது. ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த அணி செர்ஜியோ பஸ்கெட்ஸ் தலைமையில் இந்த முறை களமிறங்குகிறது.
குரூப் எஃப்
பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரேஷியா ஆகிய அணிகளும், குரூப் ஜி பிரிவில் 5 முறை சாம்பியனான பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. குரூப் எச் பிரிவில் போர்ச்சுகல், கானா, உருகுவே, தென் கொரியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
தியாகோ சில்வா பிரேசில் அணியை வழிநடத்தவுள்ளார்.