AFC Asian Cup 2024: ஆசிய கோப்பையில் அடியெடுத்து வைத்த இந்திய அணி..! 5 வருடங்களுக்கு பிறகு தகுதி..!
இந்திய அணி இடம்பெற்றுள்ள ’பி’ பிரிவில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தான், சிரியா ஆகிய நாடுகள் உள்ளது.
18வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டியானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 24 அணிகள் எந்தெந்த பிரிவில் இடம்பிடிக்கும் என்பதை முடிவு செய்வதற்கான குலுக்கல் கத்தார் தலைநகரில் உள்ள கத்தார் ஓபரா ஹவுஸில் நேற்று நடத்தப்பட்டது.
ஆசிய கோப்பை கால்பந்து:
இதன்படி குலுக்கல் முறையில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. இதில் இந்திய கால்பந்து அணி ’பி’ பிரிவில் இடம்பிடித்தது. பங்கேற்கும் 24 அணிகள் தலா 4 அணிகளாக கொண்ட ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டது. இந்திய அணி இடம்பெற்றுள்ள ’பி’ பிரிவில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தான், சிரியா ஆகிய நாடுகள் உள்ளது. ஃபிஃபா தரவரிசையில் 101வது இடத்தில் உள்ள இந்திய அணி ஐந்தாவது முறையாக ஆசிய கோப்பையில் விளையாடுகிறது. அதேபோல், ஆஸ்திரேலியா உலக தரவரிசையில் 29வது இடத்திலும், உஸ்பெகிஸ்தான் 74வது இடத்திலும், சிரியா 90வது இடத்திலும் உள்ளன.
அகில இந்திய கால்பந்து சம்மேளனத் தலைவர் கல்யாண் சௌபே, மூத்த ஆண்கள் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக், மகளிர் அணிப் பயிற்சியாளர் மேமோல் ராக்கி ஆகியோர் இந்த குலுக்கலின்போது இருந்தனர்.
AFC ஆசிய கோப்பை 2024 குழுக்கள்:
குழு ஏ | குழு பி | குழு சி | குழு டி | குழு இ | குழு எஃப் |
கத்தார் | ஆஸ்திரேலியா | ஈரான் | ஜப்பான் | தென் கொரியா | சவூதி அரேபியா |
சீனா | உஸ்பெகிஸ்தான் | ஐக்கிய அரபு எமிரெட்ஸ் | இந்தோனேசியா | மலேசியா | தாய்லாந்து |
தஜிகிஸ்தான் | சிரியா | ஹாங்காங் | ஈராக் | ஜோர்டான் | கிர்கிஸ் குடியரசு |
லெபெனான் | இந்தியா | பாலஸ்தீனம் | வியட்நாம் | பஹ்ரைன் | ஓமன் |
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3 வது இடம் பிடிக்கும் 4 சிறந்த அணிகள் சுற்று 16 தகுதிபெறும்.
𝐓𝐇𝐄 𝐃𝐑𝐀𝐖 𝐈𝐒 𝐎𝐔𝐓 ✅
— Indian Football Team (@IndianFootball) May 11, 2023
🇮🇳 India are placed in Group B of the AFC Asian Cup Qatar 2023 🏆
🇦🇺 Australia
🇺🇿 Uzbekistan
🇸🇾 Syria
How are we feeling, #BlueTigers 🐯 fans?🙌#AsianCup2023 🏆 #BackTheBlue 💙 #IndianFootball ⚽ pic.twitter.com/xK4O2gC4SR
லீக் சுற்று ஜனவரி 12ம் தேதி தொடங்கி ஜனவரி 24ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
16வது சுற்று: ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2, 2024 வரை
காலிறுதி: பிப்ரவரி 4-5, 2024
அரையிறுதி: பிப்ரவரி 7-8, 2024
இறுதிப்போட்டி: பிப்ரவரி 10, 2024