மேலும் அறிய

FIFA WORLDCUP 2022: ஒரு வழியாய் நடந்து முடிந்த ஃபிபா உலகக்கோப்பை போட்டி: 3,580 கோடி பரிசுத்தொகையில் யாருக்கு எவ்வளவு? - முழு விவரம்

FIFA WORLDCUP 2022: உலகக் கோப்பையை வென்றுள்ள அர்ஜெண்டினா அணிக்கு கோப்பையுடன் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

FIFA WORLDCUP 2022: உலகக் கோப்பையை வென்றுள்ள அர்ஜெண்டினா அணிக்கு கோப்பையுடன் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.  

தொடக்கம் முதல் ஆதிக்கம்:

22வது உலகக்கோப்பை போட்டி கத்தாரில் லூசைல் மைதானத்தில் டிசம்பர் 18ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இதில், கால்பந்து விளையாட்டின் மிரட்டல் நாயகன் மெஸ்ஸியின் அர்ஜெண்டினாவும் நடப்புச் சாம்பியன் பிரான்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. போட்டியின் ஆரம்பம் முதலே மிகவும் அக்ரசிவ் மோடில் விளையாடிய அர்ஜெண்டினா அணி களத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அர்ஜெண்டினா என முழங்கிக்கொண்டு இருக்க அர்ஜெண்டினாவின் ஆதிக்கம் மேலும், அதிகரித்தது. 

போட்டியின் 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கிக்கினை மிகவும் சரியாக பயன்படுத்திக்கொண்ட அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி சிறப்பாக கோல் அடித்து தனது அணியின் கோல் கணக்கினை தொடங்கி வைத்தார். இதன் மூலம் கோல்டன் பூட் போட்டியில் பிரான்ஸின் எம்பாப்வேவை பின்னுக்குத் தள்ளி முன்னிலை வந்தார். அவர் இந்த கோலுடன் 6வது கோல் அடித்தார்.  

முதல் பாதியில் அசத்தல்:

அதனைத்  தொடர்ந்து அக்ரசிவாக விளையாடிய அர்ஜெண்டினா அணியின் வீரரகளில் ஏஞ்சல் டி மரியா போட்டியின் 36வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணிக்கு இரண்டாவது கோலினை ஆச்சர்யம் அளிக்கும் வகையில் அடித்து பிரமிக்க வைத்தார். இதன் மூலம் அர்ஜெண்டினா அணி 2 - 0 என முன்னிலை வகித்தது. உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தனது அணிக்காக அவர் கோல் அடித்த உற்சாகத்தினை ஆனந்த கண்ணீர் சிந்தி வெளிப்படுத்தினார். போட்டியின் முதல் பாதியில் அர்ஜெண்டினா அணி 2 - 0 என முன்னிலை வகித்தது. 

ஆட்டத்தை மாற்றிய எம்பாப்பே

அதன் பின்னர் இரண்டவது பாதியில் ஆட்டம் முற்றிலும் அர்ஜெண்டினா பக்கம் இருக்க, 80வது நிமிடத்தில் கிடைத்த சிறப்பான வாய்ப்பான பெனால்டி ஷாட்டினை சாதூர்யமாக பயன்படுத்திய எம்பாப்வே கோலாக மற்றி பிரான்ஸ் அணிக்கு ஆறுதல் அளிக்க ஆறுதலால் அணி மூச்சு விட்டுக்கொண்டு இருக்கும்போதே, 81வது நிமிடத்தில் எம்பாப்வே காற்றில் வந்த பந்தை அட்டகாசமாக கோலாக மாற்றினார். இதனால் ஒட்டுமொத்த பிரான்ஸ் அணியும் போட்டிக்குள் வந்ததது. போட்டி 2 - 2 என்ற கணக்கில் டிராவாக இருக்க இரண்டாவது பாதி ஆட்டம் முடிந்தது. நார்மல் எக்ஸ்ட்ரா டைமில் மேற்கொண்டு எந்த அணியும் எடுக்காததால், மேற்கொண்டு 30 நிமிடங்கள் எக்ஸ்ட்ரா டைம் வழங்கப்பட்டது. 

அதில் முதல் 15 நிமிடங்களில் அர்ஜெண்டினா அணி அடிக்க முயன்ற கோல்களை மிகவும் சிறப்பான முறையில் பிரான்ஸ் வீரர்கள் தடுத்து உலகத்தரமான தடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியது. ஆனால் அதன் அடுத்த 15 நிமிடங்களின் தொடக்கம் முதலே துடிப்புடன் விளையாடிய அர்ஜெண்டினா அணியினர் சிறப்பான கூட்டு முயற்சியால் அணியின் கேப்டன், மேஜிகல் மெஸ்ஸி 108வது நிமிடத்தில் கோல் அடித்து அணியினை 3 - 2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கச்செய்ததுடன் போட்டியை தனக்கு சாதகமாகவும் மாற்றினார். இதனால் போட்டியின் முடிவில் அர்ஜெண்டினா அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் வென்று உலகக்கோப்பை வென்று வரலாறு படைக்கும் என நினைக்கையில் போட்டியின் 118வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஷாட்டில்  எம்பாப்வே கோல் அடித்து அதகளப்படுத்த போட்டி மீண்டும் 3 - 3 என சமன் ஆனது. இந்த கோலின் மூலம் எம்பாப்வே உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து அதகளப்படுத்தினார். 

பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றி:

அதன் பின்னர் போட்டி பெனல்டி ஷாட்டுக்கு சென்றது. இதனால் இரு அணிகாளுக்கும் தலா 5 பெனால்டி ஷாட்டுகள் வழங்கப்பட்டன. பெனால்டி ஷாட்டில் எம்பாப்வே முதல் கோல் அடிக்க, அதனைத் தொடர்ந்து மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார். அதன் பின்னர் வந்த இரண்டு பிரான்ஸ் வீரர்கள் சொதப்ப, இரண்டு அர்ஜெண்டினா வீரர்கள் கோல் அடித்தனர்.  இதனால் போட்டி பெனால்டி ஷாட்டில் அர்ஜெண்டினா அணி 3 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அடுத்த ஷாட்டை பிரான்ஸ் வீரர் கோல் அடிக்க போட்டி 3 - 2 என ஆனது, ஆனால் அதன் பின்னர், அர்ஜெண்டினா வீரர் கோல் அடிக்க போட்டியை 4 - 2 என்ற கணக்கில் வென்று, 36 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பையை கைப்பற்றியது. 

3580 கோடி பரிசுத்தொகை

கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணிக்கு கோப்பையுடன் 342 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், இரண்டாவது இடம் பிடித்த பிரான்ஸ் அணிக்கு பரிசுத்தொகையாக ரூபாய் 244 கோடி வழங்கப்பட்டுள்ளது.  

மூன்றாவது இடம் பெற்ற குரோஷிய அணிக்கு 220 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் நான்காவது இடம் பெற்ற மொரோக்கோ அணிக்கு 203 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 

ஐந்து முதல் எட்டு வரையிலான இடம் பெற்ற அணிகளுக்கு தலா  138 கோடி ரூபாய் பரிசுத் தொகையும், ஒன்பதாவது இடம் முதல் 16 வது இடம் வரை இடம் பெற்ற அணிகளுக்கு தலா 106 கோடி ரூபாயும், அதேபோல் 17வது முதல் 32 வரை இடம் பெற்ற அணிகளுக்கு தலா 73 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
Embed widget