FIFA WC 2022 Semi-Final: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள், ஆட்ட நேரம்.. விவரம் உள்ளே
உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. அனைத்து காலிறுதி போட்டிகளும் முடிந்து அரையிறுதி போட்டிகள் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளன.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. அனைத்து காலிறுதி போட்டிகளும் முடிந்து அரையிறுதி போட்டிகள் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளன.
நடப்பு கால்பந்து தொடரில் காலிறுதியில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணியாக குரோஷியா ஆனது. அந்த அணி காலிறுதியில் முன்னாள் சாம்பியன் பிரேசிலை பந்தாடியது. பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
அரையிறுதியில் அர்ஜென்டீனாவை சந்திக்கிறது குரோஷியா. இந்த ஆட்டம் வரும் டிசம்பர் 13 நள்ளிரவு 12.30 மணிக்கு லுசெயில் மைதானத்தில் நடக்கிறது. மற்றொரு காலிறுதியில் நெதர்லாந்து அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டீனா.
ரொனால்டோவை கண்ணீர் சிந்த வைத்த ஆட்டம்
இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த கால்பந்தாட்டக்காரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியது.
இந்த ஆட்டத்தில் ஆப்பிரிக்க அணியான மொராக்கோ வென்று அரையிறுதிக்குள் முதல்முறையாக அடியெடுத்து வைத்து கால்பந்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்தும், பிரான்ஸும் மோதின.
இந்த ஆட்டம் நேற்றிரவு 12.30 மணிக்கு நடந்தது. ஆரம்பம் முதலே அனல் பறந்த இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி, 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
அரையிறுதியில் மொராக்கோவும், பிரான்ஸும் சந்திக்கின்றன. இந்த ஆட்டம் டிச.14 நள்ளிரவு நடக்கிறது. இந்த ஆட்டம் அல் பெய்த் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இறுதிச்சுற்றுக்குள் இரண்டு அணிகள் மட்டுமே முன்னேறும்.
மூன்றாவது இடத்திற்கான ஆட்டம்
தோல்வி அடையும் அணிகள் மூன்றாவது இடத்திற்காக டிசம்பர் 17ஆம் தேதி மோதும். அந்த ஆட்டம் இரவு 8.30 மணிக்கு கலிஃபா ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. சுவாரசியத்துக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாத உலகக் கோப்பை கால்பந்தில் எஞ்சியுள்ள ஆட்டங்களை கண்டு ரசிக்க உலகம் முழுவதிலும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கிடக்கின்றனர்.
உலகக் கோப்பை
உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை. கடைசியாக 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தப் போட்டி டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலகக் கோப்பை போட்டியான இதில் 32 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன.
அரபு நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும். அத்துடன் ஆசிய கண்டத்தில் கால்பந்து உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.