Chess World Cup 2023: உலகக் கோப்பை செஸ்...இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா
உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார்.
உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் பிரக்ஞானந்தா (R. Praggnanandhaa) முன்னேறியுள்ளார்.
உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டத்தின் டை பிரேக்கர் பிரக்ஞானந்தா, உலகத் தரவரிசையில் அமெரிக்காவின் ஃபேபியானோ கருனாவை எதிர்கொண்டார்.
உலகின் மூன்றாம் நிலை வீரரான ஃபேபியானோ கருவானாவை (Fabiano Caruana) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை போட்டியில் இந்தியர் ஒருவர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு இரண்டாவது இந்தியராக பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளர்.
அரையிறுதியில் டைபிரேக்கர் மூலம் 3.5 - 2.5 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மற்றும் நேற்று விளையாடிய இரண்டு ஆட்டத்திலும் டிராவில் முடிந்தது. அதனால் டை பிரேக்கர் மூலம் வெற்றியாளரை உறுதி செய்யும் ஆட்டம் இன்று நடைபெற்றது.
இறுதிப்போட்டி
அசர்பைசான் தலைநகர் பகுவில் நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் (FIDE World Cup) உலகின் முதல்நிலை வீரரும் முன்னாள் உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்கிறார்.
18 வயதான பிரக்ஞானந்தா இரண்டாம் நிலை வீரரான Hikaru Nakamura என்பரை நாக்கவுட் செய்தவர், மிக இளம் வயதில் 'Candidates Tournament’ சுற்றுக்கு முன்னேறியிருக்கும் மூன்றாவது வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். அமெரிக்க கிராண் மாஸ்டர், பாபி ஃபிசர் (Bobby Fischer Chess grandmaster) நார்வே செஸ் கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோருக்கு அடுத்த பிரக்ஞானந்தா இந்தப் பெருமையை பெற்றுள்ளார். செஸ் உலகக் கோப்பை போட்டிகளில் கடந்த 2005ம் ஆண்டு நாக் அவுட் ( knockout ) சுற்றி அறிமுகம் செய்யப்பட்டதற்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் இவர்.