காமன்வெல்த்: பளு தூக்குதலில் வெள்ளிப்பதக்கம் - சங்கேத் சர்காருக்கு பரிசை அறிவித்த மகாராஷ்டிர முதல்வர்
சர்காருக்கு ரூபாய் 30 லட்சம் பரிசு வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.
2022ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற சங்கேத் சர்கார் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். வெள்ளிப் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீரர் சங்கேத் சர்காருக்கு ரூபாய் 30 லட்சம் பரிசு வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார். சனிக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 55 கிலோ எடை தூக்கும் பிரிவில் சாங்லி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான சர்க்கார் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
राष्ट्रकुल स्पर्धा २०२२ स्पर्धेतील वेटलिफ्टिंग खेळातील ५५किलो वजनी गटात रौप्यपदक पटकावणाऱ्या महाराष्ट्रातील सांगलीकर संकेत सरगर ला राज्य सरकारच्या वतीने ३० लाख रुपयांचे पारितोषिक जाहीर तसेच संकेतला प्रशिक्षण देणाऱ्या प्रशिक्षकांना ७.५ लाख रुपयांचे पारितोषिक जाहीर करण्यात आले आहे.
— Eknath Shinde - एकनाथ शिंदे (@mieknathshinde) July 31, 2022
முதலமைச்சர் அலுவலகத்தின் அறிக்கையின்படி, சங்கேத் சர்காருக்கு ரூபாய் 30 லட்சமும், அவரது பயிற்சியாளருக்கு ரூபாய் 7 லட்சமும் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
தங்கம் இலக்காக இருந்தாலும் பளு தூக்கும்போது கைமுட்டியில் காயம் ஏற்பட்டதால் சிறிது நிலை தடுமாறவே சர்கார் வெள்ளி பதக்கம் பெற்றார்.
View this post on Instagram