தேசிய அளவிலான கைப்பந்து போட்டிக்கு தேர்வான விழுப்புரம் மாணவன் - மாவட்ட ஆட்சியர் வாழ்த்து
தேசிய அளவிலான கைப்பந்து போட்டிக்கு விழுப்புரம் மாணவன் தேர்வாகியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா பள்ளியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கேல்வின்பால் கைப்பந்து போட்டி பிரிவில் தமிழக அணிக்காக விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கேல்வின் பால் (16), தந்தை செல்வகுமார், தாயார் கிறிஸ்டி கேத்தரின் ஆவார். கால்வின் பால் கைப்பந்து போட்டிக்காக தொடர்ந்து நான்கு வருடங்களாக பயிற்சி எடுத்து வருகிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதற்காக 5 மணி நேரம் கைப்பந்து விளையாட்டுக்காக செலவு செய்து வருகிறார் என தெரிவித்தார். இதற்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்போது, இந்திய பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு குழுமம் சார்பாக (SGFI) 17 வயது மாணவர்களுக்கான மாநில அளவிலான தேர்வு போட்டியானது, நாகப்பட்டினம் மாவட்டம்(SDAT) மைதானத்தில் நடைபெற்றது. இதில் மண்டல அளவில் தேர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் தமிழ்நாடு அணிக்காக மொத்தம் 13 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் விழுப்புரம் மாவட்டம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா பள்ளியை சேர்ந்த கேல்வின் பால் தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என பள்ளி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டி வருகிற அக்டோபர் மாதம் மத்திய பிரதேச மாநிலம், சுஜலாப்பூரரில் நடக்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தமிழக அணிக்காக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கேல்வின் பால் விளையாடுவதை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பழனி மாணவனுக்கும் பள்ளிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். இதுகுறித்து மாணவன் தெரிவிக்கையில், கைப்பந்து போட்டிக்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளேன். நிச்சயமாக மாநில அளவில் நடைபெற போட்டியில் வெற்றி பெற்று வருவேன் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.