![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ronaldo Goal Record: கிடைக்குற கேப்லலாம் கோல்.. கிளப் டீம்ல இவர்தான் கிங் பாரு.. 700 கோல் அடித்த ’கிங்’ ரொனால்டோ!
ரொனால்டோ உலகளவில் கிளப் அணிக்காக 700 கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார்.
![Ronaldo Goal Record: கிடைக்குற கேப்லலாம் கோல்.. கிளப் டீம்ல இவர்தான் கிங் பாரு.. 700 கோல் அடித்த ’கிங்’ ரொனால்டோ! Cristiano Ronaldo Football Record Became First Player to Score 700 Goals for Club Worldwide Ronaldo Goal Record: கிடைக்குற கேப்லலாம் கோல்.. கிளப் டீம்ல இவர்தான் கிங் பாரு.. 700 கோல் அடித்த ’கிங்’ ரொனால்டோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/10/97abaa75e711199b500d5c75c0cc2d001665412322333571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இவர், அந்த நாட்டின் தேசிய கால்பந்து அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். தற்போது 37 வயதான ரொனால்டோ கடந்த 2018ம் ஆண்டு முதல் இத்தாலியின் யுவன்டஸ் அணிக்காக ஆடி வந்தார்.
2003ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடிய அவர், கடந்த 2021 ம் ஆண்டு முதல் மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்து விளையாடி வருகிறார். சர்வதேச அளவில் பல கோடி ரசிகர்களை கொண்டிருக்கும் ரொனால்டோ பற்றிய எந்த செய்தியானாலும் அவை வைரல் ரகம்தான்.
Longevity of Cristiano Ronaldo is unmatched.🇵🇹🐐 pic.twitter.com/uSfxp29VkF
— TCR. (@TeamCRonaldo) October 10, 2022
இந்தநிலையில், ஆர்சனல் பிரீமியர் லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று எவர்ட்டன் அணியும், மான்செஸ்டர் அணியும் நேருக்குநேர் மோதியது. அப்போது ரொனால்டோ இந்த சீசனில் தனது முதல் கோலை பதிவு செய்தார். இதன்மூலம் ரொனால்டோ உலகளவில் கிளப் அணிக்காக 700 கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார்.
700 CLUB GOALS FOR CRISTIANO RONALDO 🐐 pic.twitter.com/Ot4ctJ8MH3
— GOAL (@goal) October 9, 2022
நடப்பு ப்ரீமியர் லீக் சீசனில் எவர்டன் அணிக்கு எதிராக ரொனால்டோ 44 வது நிமிடத்தில் தனது முதல் கோலை பதிவு செய்தது. இந்த போட்டியின் தொடக்கத்தில் ரொனால்டோ வெளியே உட்கார வைக்கப்பட்டிருந்தார். அதன்பிறகு மாற்று களமிறங்கிய அவர் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் உலக சாதனையை படைத்துள்ளார்.
𝟕𝟎𝟎 𝐜𝐥𝐮𝐛 𝐠𝐨𝐚𝐥𝐬.
— Cristiano Ronaldo (@Cristiano) October 10, 2022
What a beautiful number we’ve achieved together!
Thank you to all my teammates, coaches, clubs, family & friends and of course my fans.
United we continue! 🙏🏽 pic.twitter.com/oYWo766Xcl
கிளப் கால்பந்து அணிகளுக்காக ரொனால்டோ அடித்த 700 கோல்கள்:
- மான்செஸ்டர் யுனைடெட் - 144
- ரியல் மாட்ரிட் - 450
- ஜுவென்டஸ் - 101
- லிஸ்பன் - 5
⭐️ 700 club goals
— FIFA World Cup (@FIFAWorldCup) October 10, 2022
⭐️ 117 international goals
Is Cristiano Ronaldo the greatest finisher in history? 🇵🇹 pic.twitter.com/LdpmZUSIcO
இவை தவிர, ரொனால்டோ சர்வதேச அளவில் 117 கோல்களை அடித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)