மேலும் அறிய

ZIM vs IND T20I: ஜிம்பாப்வே அணியுடன் இன்று மோதும் இளம் இந்திய அணி - முதல் டி20யில் வெற்றி யாருக்கு?

ZIM vs IND T20I: இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

ZIM vs IND T20I: இந்தியா-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி, இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்க உள்ளது.

இந்தியா - ஜிம்பாப்வே மோதல்:

அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்நிலையில் மூத்த வீரர்கள் அனைவருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி, 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

முதல் வெற்றியை பெறுமா இந்தியா அணி?

இரு அணிகளும் மோதும் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில், இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியின் நேரலையை சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஒடிடியில் சோனி லைவ் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். தொடரை வெற்றிகரமாக தொடங்க இரு அணிகளும் முனைப்பு காட்டுகின்றன. ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பல முன்னணி வீரர்கள், இந்திய அணிய்ல் இருப்பதால் வெற்றி சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலம், பலவீனங்கள்:

இந்திய அணியை பொறுத்தவரை ஐபிஎல் தொடர்களில் மட்டுமின்றி, சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். அதேநேரம், ஜிம்பாப்வே அணி பெரும்பாலான போட்டிகளை கத்துக்குட்டி அணியுடனே விளையாடியுள்ளது. இதனால், போதிய அனுபவம் இல்லாத ஜிம்பாப்வே அணி, வலுவான இந்திய அணியை வீழ்த்துவது என்பது சிரமமாகவே இருக்கும். 

நேருக்கு நேர்:

சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 6 முறையும், ஜிம்பாப்வே அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

மைதானம் எப்படி?

போட்டி நடைபெறும் ஹராரே மைதானம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக இருக்கும். இதனால், இன்றைய போட்டியில் அதிகபட்ச ரன்கள் குவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது நல்லது. 180-க்கும் அதிகமான ரன்களை சேர்த்தால், முதலில் பேட்டிங் செய்யும் அணி வெற்றிக்காக போராடலாம்.

உத்தேச பிளேயிங் லெவன்:

இந்தியா: சுப்மன் கில், அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக், துருவ் ஜூரல், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான், முகேஷ் குமார், கலீல் அகமது, ரவி பிஷ்னோய்

ஜிம்பாப்வே: பிரையன் பென்னட், தடிவான்ஷே மருமணி, சிக்கந்தர் ராஜா, ஜொனாதன் காம்ப்பெல், கிளைவ் மடாண்டே, இன்னசென்ட் கையா, வெஸ்லி மாதேவெரே, லூக் ஜாங்வே, வெலிங்டன் மசகட்சா, பிளஸ்ஸிங் முசரபானி, ரிச்சர்ட் நக்ராவா

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
Embed widget