வலுக்கும் மல்லுகட்டு! WTC Final-க்குச் செல்ல ஒவ்வொரு அணிக்கும் எத்தனை வெற்றி தேவை? ஓர் அலசல்
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற ஒவ்வொரு அணியும் எத்தனை போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதை கீழே காணலாம்.
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் வலுவாக உள்ளது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பு ஆடும் 8 டெஸ்ட் போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றாலே இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.
இந்தியா உள்பட ஒவ்வொரு அணியும உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்ல எத்தனை போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதை கீழே விரிவாக காணலாம்.
இந்தியா:
நியூசிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் ( உள்நாடு)
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் ( ஆஸ்திரேலியா)
8 போட்டிகளில் 3 வெற்றி கட்டாயம் தேவை
ஆஸ்திரேலியா:
இந்தியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் ( உள்நாடு)
இலங்கைக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் ( வெளிநாடு)
7 போட்டிகளில் 4 வெற்றி கட்டாயம் தேவை
இலங்கை:
தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் ( வெளிநாடு)
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள்( உள்நாடு)
4 போட்டிகளில் 3 வெற்றி கட்டாயம் தேவை
நியூசிலாந்து:
இந்தியாவுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் ( வெளிநாடு)
இங்கிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் ( உள்நாடு)
6 போட்டிகளில் 6 போட்டியிலும் கட்டாய வெற்றி தேவை
தென்னாப்பிரிக்கா:
வங்கதேசத்திற்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் ( வெளிநாடு)
இலங்கைக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் ( உள்நாடு)
பாகிஸ்தானுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் ( உள்நாடு)
6 போட்டிகளில் கட்டாயம் 5 வெற்றி தேவை
இங்கிலாந்து:
பாகிஸ்தானுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் ( வௌிநாடு)
நியூசிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் ( வெளிநாடு)
6 போட்டிகளில் கட்டாயம் 6 வெற்றி தேவை
வங்கதேசம்:
தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் ( உள்நாடு)
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் ( வெளிநாடு)
4 போட்டிகளில் 4 போட்டிகளில் கட்டாய வெற்றி தேவை ( மற்ற அணிகளின் வெற்றியைப் பொறுத்தும்)
பாகிஸ்தான்:
இங்கிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் ( உள்நாடு)
தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் ( வெளிநாடு)
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் ( உள்நாடு)
7 போட்டிகளில் கட்டாயம் 7 வெற்றி தேவை
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கு புள்ளிப்பட்டியலில் பின்னால் உள்ள அணிகள் வெற்றியுடன் மட்டுமின்றி குறிப்பிட்ட ரன்கள் அல்லது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற சூழல் உருவாகலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.