மேலும் அறிய

WPL Final 2024: இன்று இறுதி போட்டி! காத்திருக்கும் டெல்லி - பெங்களூர்! மகளிர் பிரீமியர் லீக் கோப்பை யாருக்கு?

WPL Final 2024: மகளிர் பிரீமியர் லீக்கில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

WPL Final 2024: மகளிர் பிரீமியர் லீக்கின் இறுதிப்போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் 2024:

ஆடவர்களுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போன்று மகளிருக்கான பிரீமியர் லீக் போட்டியை கடந்த ஆண்டு பிசிசிஐ அறிமுகப்படுத்தியது. 5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், மும்பை அணி கோப்பையை அசத்தியது. அதைதொடர்ந்து நடப்பாண்டிற்கான மகளிர் பிரீமியர் லீக் தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, லீக் சுற்று மற்றும் பிளே-ஆஃப் சுற்றுகளை தொடர்ந்து இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

ஃபைனலில் டெல்லி - பெங்களூர் மோதல்: 

ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூர் அணி மற்றும் மெக் லான்னிங் தலைமையிலான டெல்லி அணி மோதும் இறுதிப்போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி, இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை, ஜியோ சினிமா செயலியிலும், ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசையிலும் ரசிகர்கள் நேரலையில் கண்டுகளிக்கலாம். இன்றைய போட்டியில் யார் வெற்றி பெற்றாலும், அவர்களுக்கு முதல்முறையாக கோப்பையாக வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். அதோடு, இந்த அணி நிர்வாகங்களின் ஆடவர் அணிகள் கூட இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பலம், பலவீனம்:

டெல்லி தனது கடைசி இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று, 12 புள்ளிகளுடன் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. கடந்த ஆண்டும் இந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணி கேப்டனான மெக் லானிங் பேட்டிங்கில் அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளார். நடப்பு தொடரில் இதுவரை 4 அரைசதங்களை விளாசியுள்ளார். பந்துவீச்சில் மரிசான் கேப் டெல்லி அணிக்காக முன்னிலையில் உள்ளார். 6 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், இறுதிப்போட்டியிலும் டெல்லி அணியில் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மந்தனா ஃபார்ம் அவுட்டில் இருக்க, 312 ரன்களுடன் ஆரஞ்சு கேப்பை தன்வசம் கொண்டுள்ள பெர்ரி பெங்களூர் அணியின் நம்பிக்கையாக உள்ளார். பந்துவீச்சிலும் அசத்தி வருகிறார். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஸ்ரேயங்கா பாட்டீல், சோஃபி மோலினக்ஸ் மற்றும் ஆஷா சோபனா ஆகியோர் இன்றைய போட்டியிலும் பெங்களூர் அணிக்காக சாதிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், டெல்லி அணிக்கு எதிராக இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளிலும், பெங்களூர் அணி தோல்வியையே சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மைதானம் எப்படி?

மைதானத்தில் இதுவரை நடந்த பத்து போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே, ஏழு முறை வெற்றி பெற்றுள்ளன. சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 158.6 ஆகவும், சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு 191 ஆகவும் உள்ளது. டாஸ் வென்ற கேப்டன் முதலில் பேட்டிங் செய்யவே பெரும்பாலும் விரும்புவர்.

உத்தேச பிளேயிங் லெவன்:

பெங்களூர் - சபினேனி மேகனா, ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), எலிஸ் பெர்ரி, சோஃபி டெவின், ரிச்சா கோஷ், ஜார்ஜியா வேர்ஹாம், சோஃபி மோலினக்ஸ், சிம்ரன் பகதூர், ஏக்தா பிஷ்ட், ஆஷா சோபனா, ரேணுகா சிங் 

டெல்லி - மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஆலிஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அனாபெல் சதர்லேண்ட், ஜெஸ் ஜோனாசென், அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டே, ராதா யாதவ், தனியா பாட்டியா, டைட்டாஸ் சாது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara vs Meena | ’’ HEROINE நானா? மீனாவா?’’ATTITUDE காட்டிய நயன்தாரா மூக்குத்தி அம்மன் சர்ச்சைNeelima Rani : 4 கோடி கடன்! நடுத்தெருவில் நின்ற நீலிமா! காலைவாரிய சினிமா கனவுSenthil Balaji | செந்தில் பாலாஜி மூவ்.. டெல்லி சென்ற பின்னணி!சந்தித்தது யாரை தெரியுமா?Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren Pandya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
Dinesh Karthik: அன்று வீரன்.. இன்று ஆசான்! கம்பீரை போல சாதிப்பாரா தினேஷ் கார்த்திக்! ஆர்சிபி வசமாகுமா மகுடம்?
Dinesh Karthik: அன்று வீரன்.. இன்று ஆசான்! கம்பீரை போல சாதிப்பாரா தினேஷ் கார்த்திக்! ஆர்சிபி வசமாகுமா மகுடம்?
Trump Vs Iran: டீலுக்கு ஒத்துக்கோ.. இல்லன்னா வேற மாதிரி ஆயிடும்.. ஈரானை எச்சரித்த ட்ரம்ப்...
டீலுக்கு ஒத்துக்கோ.. இல்லன்னா வேற மாதிரி ஆயிடும்.. ஈரானை எச்சரித்த ட்ரம்ப்...
Donald Trump: அமெரிக்க கல்வித் துறையையே மூட முடிவு செய்த ட்ரம்ப்; அதிர்ச்சிப் பின்னணி இதுதான்!
Donald Trump: அமெரிக்க கல்வித் துறையையே மூட முடிவு செய்த ட்ரம்ப்; அதிர்ச்சிப் பின்னணி இதுதான்!
IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்
IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்
Embed widget