மேலும் அறிய

WPL 2026 Eliminator: லேடீசே ராணுவ படை..! குஜராத்தை குமுறிய டெல்லி! 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி!

WPL 2026 Eliminator: மகளிர் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி அணி குஜராத்தை வீழ்த்தி 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

மகளிர் ப்ரிமியர் லீக்கின் 5வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சீசனின் இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணி ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில், இறுதிப்போட்டிக்குச் செல்லப்போகும் மற்றொரு அணி யார்? என்பதைத் தீர்மானிக்கும் எலிமினேட்டர் போட்டி இன்று வதோதராவில் நடந்தது.

169 ரன்கள் டார்கெட்:

டெல்லி - குஜராத் அணிகள் மோதிய இந்த போட்டியில் சோபி டிவைன் 6 ரன்னிலும், கேப்டன் கார்ட்னர் டக் அவுட்டாகியும், கனிகா 6 ரன்னிலும் அவுட்டாகினாலும் பெத்மூனியின் அபாரமான 62 ரன்கள், ஜார்ஜியாவின் 35 ரன்கள், காஷ்வியின் 18 ரன்களுடன் டெல்லிக்கு 169 ரன்களை குஜராத் இலக்காக நிர்ணயித்தது. 

169 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு லிஸ்லி லீ - ஷபாலி வர்மா அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். ரேணுகா, காஷ்வி, ராஜேஸ்வரி வீசிய பந்துகளை அபாரமாக அடித்து ஆடினர். லிஸ்லீ லீ பவுண்டரிகளாக விளாசினார். அவருக்கு பக்கபலமாக ஷபாலியும் பவுண்டரி விளாசினார்.

லீ - ஷபாலி மிரட்டல் பேட்டிங்:

இதனால், புயல் வேகத்தில் டெல்லி ஸ்கோர் எகிறியது. அரைசதத்தை நோக்கி முன்னேறிய லிஸ்லீயை ஜார்ஜியா அவுட்டாக்கினார். அவர் 24 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 43 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் அவுட்டான அதே ஓவரின் கடைசி பந்தில் ஷபாலி வர்மா அவுட்டானார். அவர் 21 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஜெமிமா - லாரா ஜோடி அபாரமாக ஆடியது. 10 ஓவர்களில் 107 ரன்களை டெல்லி குவிக்க குஜராத் தடுமாறியது. அனுபவம் வாய்ந்த இவர்கள் இருவரும் சேசிங்கை எளிதாக்கினார்கள். தொடர்ந்து ஜெமிமா அபாரமாக ஆடியதால் டெல்லி அணி வெற்றியை முன்னேறினர். அவருக்கு லாராவும் நல்ல ஒத்துழைப்பு அளித்தார்.

டெல்லி அபார வெற்றி:

இந்த ஜோடியைப் பிரிக்க ரேணுகாசிங், காஷ்வி கவுதம், ராஜேஸ்வரி, சோபி, ஜார்னியா ஆகியோரை பயன்படுத்தினர். ஆனாலும், இவர்களது அதிரடியால் பந்துகளை காட்டிலும் தேவைப்படும் ரன்கள் குறைவாகவே இருந்தது.

வெற்றிக்கு 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் ஜெமிமா அவுட்டானார். அவர் 23 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 41 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆனாலும், அதனால் டெல்லியின் வெற்றி பாதிக்கப்படவில்லை. கடைசியாக டெல்லி அணி 15.4 ஓவர்களில் 169 ரன்கள் எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லாரா வோல்வார்ட் 24 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 32 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். மகளிர் பிரீமியர் லீக்கில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கும் இதுவே ஆகும்.

இறுதிப்போட்டியில் ஆர்சிபி - டெல்லி:

இந்த போட்டியில் வெற்றி பெற்ற டெல்லி அணி நாளை மறுநாள் பெங்களூர் அணியுடன் இறுதிப்போட்டியில் ஆட உள்ளது. 5வது முறையாக நடக்கும் இந்த சீசனில் 4வது முறையாக டெல்லி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. டெல்லி - ஆர்சிபி ஆகிய இரு அணிகளும் கடந்த 2024ம் ஆண்டு இறுதிப்போட்டியில் ஆடியுள்ளனர். அந்த போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. .

 

 

தலைப்பு செய்திகள்

Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget