மேலும் அறிய

WPL 2024: எடுபடாத குஜராத் வியூகம்! கெத்தாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ்!

WPL 2024: டெல்லி அணி 13.1 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்தியன் மகளிர் பிரிமியர் லீக் இரண்டாவது சீசன் இறுதிகட்டத்தினை எட்டிவிட்டது. முதல் சீசனைப் போலவே இரண்டாவது சீசனிலும் ஐந்து அணிகள் களமிறங்கின.

லீக் சுற்றின் கடைசி போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்து முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.  

சொதப்பிய குஜராத்

நேற்று டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி பேட்டிங்கைத் தொடங்கிய குஜராத் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. குஜராத் அணி முதல் ஓவரின் கடைசி பந்தில் முதல் விக்கெட்டினை இழந்தது. அதன் பின்னர் நான்காவது மற்றும் ஐந்தாவது ஓவர்களில் விக்கெட்டுகளை இழக்க குஜராத் அணி நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. 4.2 ஓவர்களில் குஜராத் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 16 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. குறிப்பாக மரிஜான் காப் பந்தில் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். 

அதன் பின்னர் நிலைமையை சரி செய்ய லிட்ச்ஃபீல்ட் மற்றும் கிரண்டர் கூட்டணி நிதானமாக ஆடிவந்த நிலையில், கிரண்டர் தனது விக்கெட்டினை 12 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்தார். இவருடன் கூட்டணி சேர்ந்து நிதானமாக ஆடிவந்த லிட்சிஃபீல்டும் தனது விக்கெட்டினை இழக்க, குஜராத் அணி 48 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 

குஜராத் அணியை சரிவில் இருந்து மீட்க பாரதி ஃபுல்மாலி மற்றும் பிரைஸ் இருவரும் குஜராத் அணிக்காக பொறுப்பான இன்னிங்ஸ் ஆடினர். பாரதி ஃபுல்மாலி 36 பந்துகளில் 7 பவுண்டரி விளாசி 42 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்தார். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த பிரைஸ் 22 பந்தில் 28 ரன்கள் சேர்த்திருந்தார். இறுதியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணி சார்பில் ஷிகா பாண்டே, மரிஜான் காப் மற்றும் மின்னு மனி தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

கெத்து காட்டிய டெல்லி

அதன் பின்னர் 127 ரன்கள் எடுத்தால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடலாம் என்ற நிலையில் களமிறங்கியது. டெல்லி அணியின் கேப்டன் மெக் லேனிங் அணியின் ஸ்கோர் 31 ரன்களாக இருந்த போது தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த அலீசா கேப்சி தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் இழக்க, டெல்லி அணி 31 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இதனால் குஜராத் அணிக்கு சற்று நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் ஷாஃபாலி வர்மா மற்றும் ஜெமிமாவின் அதிரடியான ஆட்டத்தினால் குஜராத் அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. இறுதியில் டெல்லி அணி 13.1 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி சார்பில் ஷாஃபாலி வர்மா 37 பந்தில் 7 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் விளாசி 71 ரன்கள் சேர்த்திருந்தார். இந்த வெற்றி மூலம் டெல்லி அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Govt Paddy: விவசாயிகள் கொண்டாட்டம் - நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2,500 - அரசாணை வெளியீடு
TN Govt Paddy: விவசாயிகள் கொண்டாட்டம் - நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2,500 - அரசாணை வெளியீடு
Madhampatty Rangaraj: என் குழந்தையோட அப்பா..! கர்ப்பமாக்கி ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ்? ஜாய் கிரிசில்டா புகார்
Madhampatty Rangaraj: என் குழந்தையோட அப்பா..! கர்ப்பமாக்கி ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ்? ஜாய் கிரிசில்டா புகார்
Chennai Corporation: காவல்துறை கட்டுப்பாட்டில் ரிப்பன் மாளிகை.. மீண்டும் போராட்டம்? 500 போலீசார், சிசிடிவி, ஆம்புலன்ஸ்
Chennai Corporation: காவல்துறை கட்டுப்பாட்டில் ரிப்பன் மாளிகை.. மீண்டும் போராட்டம்? 500 போலீசார், சிசிடிவி, ஆம்புலன்ஸ்
TN govt: வருவாய்த்துறை அலுவலக உதவியாளர் காலி இடங்கள்; உடனே நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு
TN govt: வருவாய்த்துறை அலுவலக உதவியாளர் காலி இடங்கள்; உடனே நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lakshmi Menon Issue | தலைக்கேறிய போதை IT ஊழியரை கடத்தி அட்டாக் தலைமறைவான லட்சுமி மேனன் | Kochi
EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Paddy: விவசாயிகள் கொண்டாட்டம் - நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2,500 - அரசாணை வெளியீடு
TN Govt Paddy: விவசாயிகள் கொண்டாட்டம் - நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2,500 - அரசாணை வெளியீடு
Madhampatty Rangaraj: என் குழந்தையோட அப்பா..! கர்ப்பமாக்கி ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ்? ஜாய் கிரிசில்டா புகார்
Madhampatty Rangaraj: என் குழந்தையோட அப்பா..! கர்ப்பமாக்கி ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ்? ஜாய் கிரிசில்டா புகார்
Chennai Corporation: காவல்துறை கட்டுப்பாட்டில் ரிப்பன் மாளிகை.. மீண்டும் போராட்டம்? 500 போலீசார், சிசிடிவி, ஆம்புலன்ஸ்
Chennai Corporation: காவல்துறை கட்டுப்பாட்டில் ரிப்பன் மாளிகை.. மீண்டும் போராட்டம்? 500 போலீசார், சிசிடிவி, ஆம்புலன்ஸ்
TN govt: வருவாய்த்துறை அலுவலக உதவியாளர் காலி இடங்கள்; உடனே நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு
TN govt: வருவாய்த்துறை அலுவலக உதவியாளர் காலி இடங்கள்; உடனே நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு
VinFast VF6 & VF7: செப்.6 விற்பனைக்கு வரும் வின்ஃபாஸ்ட் கார்கள் - 2 மின்சார மாடல்களின் விலை, அம்சங்கள், ரேஞ்ச்
VinFast VF6 & VF7: செப்.6 விற்பனைக்கு வரும் வின்ஃபாஸ்ட் கார்கள் - 2 மின்சார மாடல்களின் விலை, அம்சங்கள், ரேஞ்ச்
அதிர்ச்சி! ஐஐடியில் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள்: திமுக அரசின் பொய் அம்பலம்! அன்புமணி சாடல்!
அதிர்ச்சி! ஐஐடியில் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள்: திமுக அரசின் பொய் அம்பலம்! அன்புமணி சாடல்!
Life Expectancy: ஆயுட்காலத்தில் 3.5 ஆண்டுகளை பறிக்கும் பிரச்னை, ரிஸ்கில் வட இந்தியா - அரசு தீர்வு காணுமா?
Life Expectancy: ஆயுட்காலத்தில் 3.5 ஆண்டுகளை பறிக்கும் பிரச்னை, ரிஸ்கில் வட இந்தியா - அரசு தீர்வு காணுமா?
Top 10 News Headlines: ஸ்டாலின் வெளிநாடு பயணம், ஜப்பானில் பிரதமர் மோடி, உறைந்து நின்ற மாணவன் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் வெளிநாடு பயணம், ஜப்பானில் பிரதமர் மோடி, உறைந்து நின்ற மாணவன் - 11 மணி வரை இன்று
Embed widget