World Cup 2023 Top Performers: உலகக் கோப்பையில் பேட்டிங், பவுலிங்கில் இதுவரை அசத்திய வீரர்கள்: டாப் 5 அணிகள் எவை?
World Cup 2023 Top Performers: உலகக் கோப்பை 2023 போட்டியில் இதுவரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
World Cup 2023 Top Performers: உலகக் கோப்பை 2023 போட்டியில் இதுவரை அதிக ரன் மற்றும் விக்கெட் சேர்த்தவர்களின் பட்டியலில், பாகிஸ்தானின் ரிஸ்வான் மற்றும் இந்தியாவின் பும்ரா ஆகியோர் முதலிடம் வகிக்கின்றனர்.
உலகக் கோப்பை:
10 அணிகள் பங்கேற்றுள்ள ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, கடந்த 5ம் தேதி தொடங்கி இந்தியாவின் 10 நகரங்களில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. அதிரடியான பேட்டிங், கடைசி ஓவர் த்ரில்லிங், எதிர்பாராத வெற்றி என பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 13 லீக் போட்டிகளின் முடிவில் அதிக ரன் மற்றும் விக்கெட்டுகளை சேர்த்த வீரர்கள், புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்துள்ள அணிகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அதிக ரன் சேர்த்த வீரர்கள்:
அதிக ரன் சேர்த்த வீரர்களின் பட்டியலில் பாகிஸ்தானின் ரிஸ்வான் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், இரண்டு அரைசங்கள் மற்றும் ஒரு சதம் உட்பட 248 ரன்களை குவித்துள்ளார். இந்த பட்டியலில் நியூசிலாந்து வீரர் கான்வே இரண்டாவது இடத்தில் இருக்க, இந்திய கேப்டன் ரோகித் சர்மா 3வது இடத்தில் உள்ளார். 3 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் விளாசியுள்ளார். இந்த பட்டியலில் கோலி 156 ரன்களுடன் 10வது இடத்தில் உள்ளார்.
வீரர்கள் | போட்டிகள் | ரன்கள் | சராசரி | ஸ்ட்ரைக் ரேட் | அதிகபட்ச ஸ்கோர் |
முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) | 3 | 248 | 124.00 | 93.58 | 131* |
டெவோன் கான்வே (நியூசிலாந்து) | 3 | 229 | 114.50 | 104.09 | 152* |
ரோகித் ஷர்மா (இந்தியா) | 3 | 217 | 72.33 | 141.83 | 131 |
குயின்டன் டி காக் (தென்னாப்ரிக்கா) | 2 | 209 | 104.50 | 110.00 | 109 |
குசல் மெண்டிஸ் (இலங்கை) | 2 | 198 | 99.00 | 166.38 |
அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள்:
அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தில் உள்ளார். 3 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இந்த பட்டியலில் நியூசிலாந்து வீரர்கள் சாண்ட்னர் மற்றும் ஹென்றி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். சக இந்திய வீரர்களான ஜடேஜா, பாண்ட்யா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர், தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பட்டியலில் முறையே 7 முதல் 9வது இடங்களை வகிக்கின்றனர்.
வீரர்கள் | அணி | போட்டிகள் | விக்கெட்டுகள் |
ஜஸ்பிரித் பும்ரா | இந்தியா | 3 | 8 |
மிட்செல் சாண்ட்னர் | நியூசிலாந்து | 3 | 8 |
ஹென்றி | நியூசிலாந்து | 3 | 8 |
ஹசன் அலி | பாகிஸ்தான் | 3 | 7 |
ககிசோ ரபாடா | தென்னாப்ரிக்கா | 2 | 5 |
டாப் 5 அணிகள்:
நடப்பு உலகக் கோப்பையில் தோல்வியே காணாமால் இந்தியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய அணிகள் முறையே முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. அதேநேரம், ஒருநாள் உலகக் கோப்பையை அதிகமுறை வென்ற அணியான ஆஸ்திரேலிய அணி, தற்போது புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் |
இந்தியா | 3 | 3 | 0 | 6 |
நியூசிலாந்து | 3 | 3 | 0 | 6 |
தென்னாப்ரிக்கா | 2 | 2 | 0 | 4 |
பாகிஸ்தான் | 3 | 2 | 1 | 4 |
இங்கிலாந்து | 3 | 1 | 2 | 2 |