மேலும் அறிய

Shubman Gill: உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு பேரதிர்ச்சி..! தொடக்க வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு?

Shubman Gill: இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Shubman Gill: ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடங்கியுள்ள நிலையில், இந்திய அணியின் தொடக்க விரரான சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் வரும் 8ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள,  ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. நடப்பாண்டில் மட்டும் அவர் ஒருநாள் போட்டிகளில் 1230 ரன்கள் குவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்நிலையில் சுப்மன் கில்லிற்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில், ரோகித் சர்மா உடன் தொடக்க விரராக களமிறங்குவது யார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இதையும் படிங்க: ODI WC Pak Vs Ned: உலகக் கோப்பையில் இன்றைய போட்டி - பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சை சமாளிக்குமா நெதர்லாந்து? வெற்றி யாருக்கு?

நல்ல ஃபார்மில் தொடரும் கில்:

24 வயதான வலது கை பேட்ஸ்-மேன் ஆன சுப்மன் கில், நடப்பாண்டு ஐபிஎல் போட்டியிலிருந்தே சிறப்பான ஃபார்மில் தொடர்கிறார். மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம், ஆசியக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், உள்ளூரில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல, இந்திய அணியில் கில் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தபோதே, அவர் மட்டும் மாஸ்க் அணிந்திருந்தார். இதனால், அவருக்கு ஏற்கனவே உடல்நலன் பாதிக்கப்பட்டு இருந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்திய அணியின் தொடக்க வீரர் யார்?

கேப்டன் ரோகித் சர்மா உடன் சுப்மன் கில் தான் தொடக்க விரராக களமிறங்குவதாக இந்திய அணி திட்டமிட்டு இருந்தது. ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல்  போட்டியில் அவர் விளையாட முடியாது என கூறப்படுவதால், தொடக்க வீரராக யார் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆசியக் கோப்பை முதற்கொண்டு மிடில் ஆர்டரில் விளையாடி வரும் கே. எல். ராகுல் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. அதேநேரம், வலது மற்றும் இடது கை கூட்டணியை கருத்தில் கொண்டு, இளம் வீரர் இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்கவும் வாய்ப்புள்ளது. இதனிடையே, சுப்மன் கில் விரைவாக குணமடைந்து மீண்டும் இந்திய அணியில் இணைய வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”வன்னியர் சங்கத் தலைவரின் தலையை வெட்டுவீர்களா? – கொட்ட கொட்ட குனியமாட்டோம்” ராமதாஸ் எச்சரிக்கை..!
”வன்னியர் சங்கத் தலைவரின் தலையை வெட்டுவீர்களா? – கொட்ட கொட்ட குனியமாட்டோம்” ராமதாஸ் எச்சரிக்கை..!
TN Rain Update: அடடே..! தமிழகத்தில் வெளுக்கப் போகும் கனமழை - சென்னையில் மழைக்கு வாய்ப்பா? இன்றைய வானிலை நிலவரம்
TN Rain Update: அடடே..! தமிழகத்தில் வெளுக்கப் போகும் கனமழை - சென்னையில் மழைக்கு வாய்ப்பா? இன்றைய வானிலை நிலவரம்
US Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் - தட்டி தூக்கும் டொனால்ட் ட்ரம்ப், அப்ப கமலா ஹாரிஸின் நிலைமை?
US Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் - தட்டி தூக்கும் டொனால்ட் ட்ரம்ப், அப்ப கமலா ஹாரிஸின் நிலைமை?
"டெல்லியா இருந்தாலும்.. Local-ஆ இருந்தாலும் 2026 திமுக தான்" துணை முதல்வர் உதயநிதி அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Karur BJP Members Join DMK : தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி ஷாக்கான அண்ணாமலை ஸ்டாலின் போடும் கணக்குPawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”வன்னியர் சங்கத் தலைவரின் தலையை வெட்டுவீர்களா? – கொட்ட கொட்ட குனியமாட்டோம்” ராமதாஸ் எச்சரிக்கை..!
”வன்னியர் சங்கத் தலைவரின் தலையை வெட்டுவீர்களா? – கொட்ட கொட்ட குனியமாட்டோம்” ராமதாஸ் எச்சரிக்கை..!
TN Rain Update: அடடே..! தமிழகத்தில் வெளுக்கப் போகும் கனமழை - சென்னையில் மழைக்கு வாய்ப்பா? இன்றைய வானிலை நிலவரம்
TN Rain Update: அடடே..! தமிழகத்தில் வெளுக்கப் போகும் கனமழை - சென்னையில் மழைக்கு வாய்ப்பா? இன்றைய வானிலை நிலவரம்
US Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் - தட்டி தூக்கும் டொனால்ட் ட்ரம்ப், அப்ப கமலா ஹாரிஸின் நிலைமை?
US Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் - தட்டி தூக்கும் டொனால்ட் ட்ரம்ப், அப்ப கமலா ஹாரிஸின் நிலைமை?
"டெல்லியா இருந்தாலும்.. Local-ஆ இருந்தாலும் 2026 திமுக தான்" துணை முதல்வர் உதயநிதி அதிரடி
Breaking News LIVE 6th NOV 2024: கலிஃபோர்னியா மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி உறுதி
Breaking News LIVE 6th NOV 2024: கலிஃபோர்னியா மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி உறுதி
CM MK Stalin:
CM MK Stalin: "35 ஆண்டுகால பிரச்சினைக்குத் தீர்வு! 10 ஆயிரம் குடும்பங்கள் பயன்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
Israel Nethanyahu: போருக்காக புதிய ஆளை இறக்கிய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு - அடுத்து என்ன நடக்குமோ?
Israel Nethanyahu: போருக்காக புதிய ஆளை இறக்கிய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு - அடுத்து என்ன நடக்குமோ?
இந்தாண்டு பருவமழை தண்ணீர் எங்கே நிக்குதுன்னு பாக்குறேன் - ஆட்சியர் அதிரடி..!
இந்தாண்டு பருவமழை தண்ணீர் எங்கே நிக்குதுன்னு பாக்குறேன் - ஆட்சியர் அதிரடி..!
Embed widget