ODI WC Pak Vs Ned: உலகக் கோப்பையில் இன்றைய போட்டி - பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சை சமாளிக்குமா நெதர்லாந்து? வெற்றி யாருக்கு?
ODI WC Pak Vs Ned: ஐதராபாத்திக்ல் இன்று நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைய்ன் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன.
ODI WC Pak Vs Ned: ஐசிசி உலகக் கோப்பையின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
பாகிஸ்தான் - நெதர்லாந்து மோதல்:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஒருநாள் உலகக் கோப்பை நேற்று உற்சாகமாக தொடங்கியது. நவம்பர் 19ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி, கடந்த உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் பெற்ற தோல்விக்கு நியூசிலாந்து பழிதீர்த்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் வலுவான பாகிஸ்தானை, வளர்ந்து வரும் அணியான நெதர்லாந்து எதிர்கொள்ள உள்ளது. தொடரை வெற்றிகரமாக தொடங்க பாகிஸ்தான் முனைகிறது. அதேநேரம், அவர்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்க முழு திறமையயும் வெளிப்படுத்த நெதர்லாந்து தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐதராபாத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் தொடங்குகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஹாட்-ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.
பலம் & பலவீனங்கள்:
ஆசியக் கோப்பையில் லீக் சுற்றில் வெளியேறியதோடு, உலகக் கோப்பையில் இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், இன்றைய போட்டியில் வென்று வெற்றிப் பாதைக்கு திரும்ப பாகிஸ்தான் ஆர்வம் காட்டி வருகிறது. பேட்டிங்கில் பாபர் அசாம், ஃபகார் ஜமான் மற்றும் முகமது ர்ஸ்வான் ஆகிய நட்சத்திர வீரர்கள் நம்பிக்கையளிக்க, பந்துவீச்சில் ஷாஹின் ஷா அஃப்ரிடி தலைமையிலான வேகப்பந்து விச்சு யூனிட் நெதர்லாந்தை மிரட்ட காத்திருக்கிறது. இதனால், இந்த போட்டி அவர்களுக்கு கடுமையானதாகவே இருக்கக் கூடும். சர்வதேச அணியில் போதிய அனுபவம் இல்லாத நெதர்லாந்து அணி, இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 6 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மைதான விவரம்:
ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும், ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருந்தது. இன்றைய போட்டியிலும் அதே நிலைமை நிலவக் கூடும். டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது சாதகமாக கருதப்படுகிறது. கடைசியாக விளையாடிய 7 ஒருநாள் போட்டிகளிலும், முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம் இருந்துள்ளது.
உத்தேச அணிகள்:
பாகிஸ்தான்:
ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் ஆசம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்
நெதர்லாந்து:
மேக்ஸ் ஓ'டவுட், விக்ரம்ஜித் சிங், வெஸ்லி பாரேசி, பாஸ் டி லீட், தேஜா நிடமானுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ், ஷாரிஸ் அஹ்மத், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தத், பால் வான் மீகெரென்
வெற்றி வாய்ப்பு: போட்டியில் பாகிஸ்தான் அணி வெல்லவே அதிக வாய்ப்பு