மேலும் அறிய

ODI WorldCup: உலகக்கோப்பை திருவிழா அக்டோபர் 5-ந் தேதி தொடக்கம்? இறுதிப்போட்டி மோடி மைதானத்திலா?

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், உலக கோப்பை எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழாவாக கருதப்படுவது உலகக்கோப்பை. டி20 உலகக்கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்றவை இருந்தாலும் 50 ஓவர் உலக கோப்பைக்கு என தனி மவுசு உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் 50 ஓவர் உலக கோப்பை, கடைசியாக இங்கிலாந்தில் நடைபெற்றது. 

உலகக்கோப்பை எப்போது தொடங்குகிறது?

இந்த சூழ்நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த முறை உலக கோப்பை இந்தியாவில் நடப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. 2011 உலகக்கோப்பையை தோனி தலைமையிலான இந்தியா அணி கைப்பற்றியிருந்தது.

அதன் பிறகு நடைபெற்ற இரண்டு உலகக்கோப்பையிலும் அரையிறுதி வரை சென்ற இந்தியா அணி, தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், உலகக்கோப்பை எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி தொடங்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதேபோல, நவம்பர் 19ஆம் தேதி, இறுதி போட்டி நடைபெறலாம் என கூறப்படுகிறது. விரைவில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிட உள்ளது.

இறுதி போட்டி எங்கு?

போட்டியை நடத்துவதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சுமார் 12 மைதானங்களை தேர்வு செய்துள்ளதாகவும் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அகமதாபாத் மோடி மைதானத்தை தவிர்த்து பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட் மற்றும் மும்பை ஆகிய மைதானங்களில் உலகக்கோப்பை தொடரை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.  

உலகக்கோப்பை தொடர் 46 நாட்கள் நடைபெறும் என்றும், மொத்தம் 48 ஆட்டங்களைக் கொண்ட அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 10 அணிகள்  பங்கேற்கின்றன.

இதேபோன்று பயிற்சி ஆட்டங்களுக்காக மேலும் சில மைதானங்கள் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக உலகக்கோப்பை தொடருக்கான போட்டிகள் எப்போதும் நடைபெறும் என்ற அறிவிப்பு ஓராண்டுக்கு முன்னரே வெளியிடப்படும்.

ஆனால், போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளதால் பாகிஸ்தான் வீரர்களுக்கான விசா வழங்குதல், வரி சலுகைகள் உள்ளிட்ட விவகாரங்கள் காரணமாக மத்திய அரசின் முடிவை எதிர்பார்த்து ஐசிசி காத்து கொண்டிருக்கிறது. கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து, பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் விளையாடுவதற்கு விசா மறுக்கப்பட்டு வருகிறது. 

ஆனால், இந்த உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்காக அவர்களுக்கு மத்திய அரசு விசா வழங்கும் என்று பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படிக்க: Zimbabwe vs Netherlands: உலகக்கோப்பைக்கு தகுதி பெற மல்லுகட்டு..! 12வது இடத்திற்கு மோதும் ஜிம்பாப்வே vs நெதர்லாந்து..!

தலைப்பு செய்திகள்

IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Vaigai Selvan on ADMK EPS: ''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Embed widget