பதட்டத்தில் ஜெர்சியை மாற்றி நியூசி.,யை 'மர்கய்யா' செய்த ரிஷப்: கைபுள்ளய கைல பிடிக்க முடியல!
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 வது டி 20 போட்டியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் டி 20 உலகக்கோப்பை போட்டிக்கான ஜெர்சியை அணிந்து வந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலககோப்பை டி20 தொடரில் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி, சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறிய இந்திய அணியுடன் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியாவும் நியூசிலாந்தும் நேற்று மோதிய இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் ஷர்மா, ஃபீல்டிங் தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவிற்கு 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது.
154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ராகுல், ரோஹித் அதிரடி ஓப்பனிங் கொடுத்தனர். இரு வீரர்களும் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்திய அணி 100 ரன்கள் எட்டும் வரை விக்கெட் விழவில்லை. போட்டியின் 14வது ஓவரில்தான் ராகுல் (65) அவுட்டானார். அவரை அடுத்து ரோஹித் (55) அவுட்டாகி வெளியேறினாலும், வின்னிங் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார் ரிஷப் பண்ட். 17.2 ஓவர்களில், 155 ரன்கள் எடுத்தது இந்திய அணி.
இந்தநிலையில், நேற்று நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தபோது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டி 20 உலகக்கோப்பை போட்டியில் அணிந்திருந்த ஜெர்சியை அணிந்து வந்தார். அதன் பிறகு டி 20 உலகக்கோப்பை பொறுத்திருந்த இடத்தில் டேப்பை கொண்டு ஒட்டி மறைந்திருந்தார். இதையடுத்து, அந்த படத்தை இணையத்தில் பதிவிட்ட ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர்.
Rishabh Pant became the first Player to win against New Zealand in a world cup jersey. 😎 pic.twitter.com/IyPJDbdvrI
— Akshat Om (@AkshatOM3) November 20, 2021
மேலும், அந்த புகைப்படத்தின் கீழ் ரசிகர் ஒருவர், 2003 க்கு பிறகு உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்ற ஒரே வீரர் ரிஷப் பண்ட் தான் என்று கிண்டலாக கமெண்ட் செய்து இருந்தார். கடந்த இரண்டு போட்டிகளிலும் ரிஷப் பண்ட் தலா ஒரு பௌண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றிபெற செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்