“வீ ஆர் வெயிட்டிங்; ஃபைனல் இந்தியாவுடன் ஆட வேண்டும்” - விருப்பம் தெரிவிக்கும் பாகிஸ்தான் பிரபல வீரர்!
அடிலெய்டில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி மதியம் 1.30 மணிக்கு துவங்கும் நிலையில் அதில் வெற்றி பெறும் அணி மெல்போர்னில் ஏற்கனவே தடத்தை பதித்துவிட்ட பாகிஸ்தானோடு மோதும்.
நியூசிலாந்தை அரையிறுதியில் வீழ்த்தி 13 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணி டி20 உலககோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதி வெற்றியால் பாகிஸ்தான் நாடே சந்தோஷமாக இருக்கிறது. இறுதிப்போட்டி சென்றதை கொண்டாடி வருகிறது. குரூப் 2 வில் மிகவும் மோசமான நிலையில் இருந்த பாகிஸ்தான் தனது அசாத்திய முயற்சியால் தற்போது முதல் ஆளாக ஃபைனல்ஸ் சென்றுள்ளது. குரூப் சுற்றுகளில் ஜிம்பாப்வேயிடம் தோற்று கலங்கிய பாகிஸ்தான் அணி தற்போது ஃபைனல் வந்திருப்பதை உலகம் வியக்கிறது. நேற்றைய போட்டியில் ஆரம்பத்தில் விக்கெடுகளை இழந்து அணி தடுமாற, டேர்லி மிட்செல் கடைசி வரை நின்று நியூசிலாந்தை காப்பாற்றினார். அவர் 35 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 53 ரன்களை குவித்தார். அவரது ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்களை குவித்தது.
பாகிஸ்தான் வெற்றி
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி தொடக்க வீரர்கள் நிலையாக ஆடி முதல் விக்கெட்டிற்கே 105 ரன்களை குவித்தனர். நிலையாக விளையாடிய கேப்டன் பாபர் அசாம் 42 பந்துகளில் 53 ரன்களை விளாசினார். அவருக்கு உறுதுணையாக ஆடிய முகமது ரிஸ்வான் 43 பந்துகளில் 57 ரன்களைக் குவித்தார். அதன் பிறகு வந்த முகமது ஹாரிஸ் 26 பந்துகளில் 30 ரன்களை அடிக்க பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 153 ரன்களை சேர்த்து வெற்றி கண்டது.
இறுதிப்போட்டியில் பாகிஸ்தான்
இந்த வெற்றி மூலம் இறுதிப்போட்டிக்கு சென்ற பாகிஸ்தான் கடைசியாக 2009 இல் இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இலங்கையை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது. தற்போது ஆஸ்திரேலியாவில் பல டராமாக்களுக்கு மத்தியில் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. இந்தியா ஜிம்பாப்வேயிடம் தோற்ற பிறகு பங்களாதேஷ், தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து ஆகியவற்றை வென்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. அவர்கள் உள்ளே வர நெதர்லாந்து தென் ஆப்ரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்ததும் ஒரு முக்கிய காரணம். இல்லை என்றால் தென் ஆப்பிரிக்கா வந்திருக்கும்.
இந்தியா -இங்கிலாந்து போட்டி
எப்படியோ உள்ளே வந்துவிட்ட பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் ஃபைனல்ஸ் விளையாட வெறிகொண்டு காத்திருக்கிறது. அந்த ரேஸில் இந்தியாவும் இருப்பதுதான் காரணம். அடிலெய்டில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி மதியம் 1.30 மணிக்கு துவங்கும் நிலையில் அதில் வெற்றி பெறும் அணி மெல்போர்னில் ஏற்கனவே தடத்தை பதித்துவிட்ட பாகிஸ்தானோடு மோதும். அந்த போட்டிக்கு முன்னதாக, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் இந்தியாவுக்கு ஒரு செய்தியை கூறினார்.
Dear India, good luck for tomorrow. We'll be waiting for you in Melbourne for a great game of cricket. pic.twitter.com/SdBLVYD6vm
— Shoaib Akhtar (@shoaib100mph) November 9, 2022
வீ ஆர் வெயிட்டிங்
"இந்துஸ்தான், நாங்கள் மெல்போர்னை அடைந்துவிட்டோம். உங்களுக்காக காத்திருக்கிறோம். இங்கிலாந்தை தோற்கடித்து மெல்போர்ன் வருவதற்கு வாழ்த்துக்கள். மெல்போர்னில் தான் 1992 இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தினோம். இப்போது ஆண்டு 2022. வருடங்கள் வித்தியாசம் ஆனால் எண்கள் ஒன்றுதான். எனக்கு இந்தியா-பாகிஸ்தான் இறுதிப் போட்டி வேண்டும். இன்னும் ஒரு முறை விளையாடுவோம். நமக்கு இன்னொரு போட்டி தேவை. வீ ஆர் வெயிட்டிங்… முழு உலகமும் அதற்காகத்தான் காத்திருக்கிறது", என்று சோயிப் அக்தர் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டுள்ள விடியோவில் தெரிவித்துள்ளார்.