Watch Video: "தோனிக்குத்தான் ஃபர்ஸ்ட் கேக்..." - விராட்கோலி பர்த்டே ஸ்பெஷல் வீடியோ.!
இந்திய கேப்டன் விராட்கோலியின் பிறந்த நாளை இந்திய அணி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் ரன்மெஷின் என்றும் கிரிக்கெட்டின் கிங் என்றும் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் விராட்கோலிக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். அவரது பிறந்த நாளான நேற்று இந்திய அணி உலககோப்பை டி20 தொடரில் தனது முக்கியமான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியையும் வீழ்த்தியது. ஸ்காட்லாந்து அணியை 85 ரன்களில் சுருட்டி. 6.3 ஓவர்களிலே இந்திய அணி வெற்றி பெற்று தனது ரன்ரேட்டை 1.619 என்ற கணக்கில் மற்ற அணிகளை காட்டிலும் முன்னிலையில் உள்ளது.
இந்திய கேப்டன் விராட்கோலியின் பிறந்தநாளை முன்னிட்டு ஆட்டம் முடிந்ததும் இந்திய அணியின் ட்ரெஸ்சிங் ரூமில் கோலியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த கேக் மீது முன்னாள் கேப்டனும், ஆலோசகருமான தோனி மெழுகுவர்த்திகளை அலங்கரிக்க பின்னர் வந்த கோலி கேக் வெட்டினார்.
Cake, laughs and a win! 🎂 😂 👏#TeamIndia bring in captain @imVkohli's birthday after their superb victory in Dubai. 👍 👍 #T20WorldCup #INDvSCO pic.twitter.com/6ILrxbzPQP
— BCCI (@BCCI) November 5, 2021
தோனி, முகமது ஷமி, ஜடேஜா, இஷான்கிஷான், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்குமார், ரிஷப்பண்ட் என இந்திய வீரர்கள் சுற்றி நின்று இனிய பிறந்தநாள் என்று வாழ்த்துகள் பாடினர். கேக்கை வெட்டிய கோலி மகேந்திர சிங் தோனிக்கு முதல் கேக்கை ஊட்டினார். பின்னர், ஷர்துல் தாக்கூர், சூர்யகுமார் யாதவ் என்று அனைவருக்கும் ஊட்டினார். தனது பிறந்த நாளில் இந்திய அணி தனது முக்கியமான ஆட்டத்தில் வெற்றியைப் பெற்றிருப்பது விராட்கோலிக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்திருக்கும்.
Huge respect to @imVkohli and co. for taking the time 🤜🤛 pic.twitter.com/kdFygnQcqj
— Cricket Scotland (@CricketScotland) November 5, 2021
முன்னதாக, ஸ்காட்லாந்து அணியை வீழ்த்திய பிறகு இந்திய அணி வீரர்கள் ஸ்காட்லாந்து அணி வீரர்களை அவர்களது ட்ரெசிங் ரூமீற்கு சென்று நேரில் சந்தித்தனர். இந்திய கேப்டன் விராட்கோலி தலைமையில் சென்ற இந்திய வீரர்கள், அணி நிர்வாகிகள் சிலர் ஸ்காட்லாந்து நாட்டு வீரர்களுடன் சிறிது நேரம் உரையாடினர். இந்த சந்திப்பின்போது, ஸ்காட்லாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சில ஆலோசனைகளை வழங்கினர்.
இதுதொடர்பாக, ஸ்காட்லாந்து கிரிக்கெட் நிர்வாகம் தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்திய அணியினர் சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டு, விராட்கோலி மற்றும் அணியினருடன் நேரம் செலவிட்டது மிகப்பெரும் கவுரவம் என்று பதிவிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்