Watch Video: தோனியும் ப்ராவோவும் கிரிக்கெட் ஆடிதானே பார்த்து இருக்கீங்க? தாண்டியா ஆடி பார்த்து இருக்கீங்களா?
ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் நிகழ்வில் தோனி மற்றும் ப்ராவோ இணைந்து தாண்டியா ஆடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது

சி.எஸ்.கே அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாகவும் நெருங்கிய நண்பர்களான தோனி மற்றும் ப்ராவோ இணைந்து தாண்டிய நடன்மாடும் வீடியோ சமூக் வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆனந்த் அம்பானி
முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சண்டை வரும் ஜூலை 12 ஆம் தேதி கரம் பிடிக்க இருக்கிறார். திருமணத்திற்கும் முன்பாக ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 தேதி முதல் நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன் காம்ப்ளக்ஸில் இந்த நிகழ்வானது மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
இந்திய அளவிலான பிரபலங்கள், வி.ஐ.பிக்கள், வி.வி.ஐ.பிக்கள் மட்டுமின்றி உலகளவில் உள்ள ஏராளமான பிரபலங்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ப்ராவோ இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தாண்டியா ஆடிய தோனி - ப்ராவோ:
இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் அமீர் கான் , ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் ஆகிய மூவரும் இணைந்து நடனமாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹாலிவுட் பாப் பாடகரான ரிஹானாவுடன் நடனமாடும் வீடியோ ஒன்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியானது. கடந்த இரண்டு நாட்களாக நடந்து வரும் இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ஜாம் நகர் சென்றுள்ளார். இப்படியான நிலையில் இந்த நிகழ்ச்சியில் தோனி மற்றும் ப்ராவோ இருவரும் இணைந்து இந்த நிகழ்வில் தாண்டியா அடியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாக தோனி இந்த மாதிரியான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர் இல்லை என்றாலும் இந்த நிகழ்ச்சியில் அவர் தனது குடும்படத்துடன் கலந்துகொண்டார். இது அவரது ரசிகர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
குஜராத்தின் ஜாம் நகரில் நடைபெற்று வரும் இந்த விழாவில் பூடான் மன்னர் நாம்கேல், அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப், மெட்டா நிறுவனத் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான், மகேந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மகேந்திரா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
View this post on Instagram
பிரபலங்களுக்கு அழைப்பு:
அதேசமயம் அஜய் தேவ்கன், ரன்வீர் சிங், சித்தார்த் மல்கோத்ரா, ஷாருக்கான், அமீர் கான், அக்ஷய்குமார், ராம் சரண், நடிகைகள் தீபிகா படுகோன், மாதுரி தீக்சித், கியரா அத்வானி, அனன்யா பாண்டே, இயக்குநர் அட்லீ உள்ளிட்டோரும் திரைத்துறை சார்பில் கலந்து கொண்டனர். விளையாட்டு துறை சார்பில் சச்சின் டெண்டுல்கர் ரோகித் ஷர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஜாஹிர் கான், முன்னாள் கேப்டன் தோனி ஆகியோரும் பங்கேற்றனர். அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதுமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் குஜராத் மாநிலமே கொண்டாட்டங்களால் களைக்கட்டியது எனலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

