Watch: பைக் லவ்வர் மட்டும் அல்ல.. இப்புடு சூடு.. விண்டேஜ் ரோல்ஸ் ராய்ஸ் காரை ஓட்டி அசத்திய தோனி
மகேந்திர சிங் தோனி சமீபத்தில் அவரது சொந்த ஊரான ராஞ்சியின் சாலையில் ஓட்டியதை கண்ட ரசிகர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
மகேந்திர சிங் தோனி ஒரு பைக் பிரியர் என்றும் ராஞ்சியில் அவரது வீட்டில் உள்ள பெரிய கேரேஜில் பல ஸ்போர்ட்ஸ் பைக்குகள் மற்றும் விண்டேஜ் பைக்குகள் வைத்திருக்கிறார் என்பதும் பலரும் அறிந்த விஷயம், ஆனால் அவர் ஒரு விண்டேஜ் கார் விரும்பியும் கூட என்பது பலருக்குத் தெரியாது.
விண்டேஜ் ரோல்ஸ் ராய்ஸில் தோனி
தோனியின் பண்ணை வீட்டில் உள்ள கேரேஜில் சமீபத்திய உயர் ரக கார்கள் மற்றும் பல பழங்கால விண்டேஜ் கார்களும் உள்ளன. அதில் அவரது பிரியமான கார்களில் ஒன்று பழைய ரோல்ஸ் ராய்ஸ் சிவர் ரெய்த் II ஆகும், அதை அவர் சமீபத்தில் அவரது சொந்த ஊரான ராஞ்சியின் சாலையில் ஓட்டியதை கண்ட ரசிகர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த கார் 1980 ஆண்டு வெளிவந்த மாடல் ஆகும். ஆனால் அதனை தோனி 2021-இல் தான் வாங்கினார்.
Check out this cool video ! MS Dhoni was spotted raiding his vintage Rolls Royce car in Ranchi - what an awesome way to show his love for classic cars! #MSDhoni #RollsRoyce #VintageCars #Ranchi pic.twitter.com/9hrRQBgZ8g
— Avnish Tiwari (@avnishtiwarii) July 25, 2023
ஜிம்மில் இருந்து வெளியேறும் வீடியோ
அதோடு சமீபத்தில் தோனி ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்தில் உள்ள ஜிம்மில் இருந்து வெளியேறுவதை ஒரு ரசிகர் பார்த்துள்ளார். அதனை விடியோ எடுத்து வெளியிட்ட நிலையில் அதுவும் வைரல் ஆனது.
Latest Glimpse From JSCA ❤️#MSDhoni pic.twitter.com/NS5oDEhuFH
— Chakri Dhoni (@ChakriDhoni17) July 25, 2023
வெங்கடேஷ் பிரசாத் மற்றும் சுனில் ஜோஷி வெளியிட்ட வீடியோ
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான வெங்கடேஷ் பிரசாத் மற்றும் சுனில் ஜோஷி சமீபத்தில் தோனியின் பண்ணை வீட்டில் உள்ள கார்களின் பிரமாண்ட தொகுப்பை வீடியோவாக பகிர்ந்து கொண்டனர். அதில் தோனியின் அனைத்து பைக்குகள் மற்றும் கார்களும் இடம்பெற்றுள்ளன. தோனி உண்மையில் எந்த அளவு பைக்குகள் மீது பிரியம் கொண்டவர் என்பதை ரசிகர்கள் கண்கூடாக காண்பது இதுவே முதல் முறை.
One of the craziest passion i have seen in a person. What a collection and what a man MSD is . A great achiever and a even more incredible person. This is a glimpse of his collection of bikes and cars in his Ranchi house.
— Venkatesh Prasad (@venkateshprasad) July 17, 2023
Just blown away by the man and his passion @msdhoni pic.twitter.com/avtYwVNNOz
தோனி வைத்திருக்கும் பைக் மற்றும் கார்கள்
ஹார்லி-டேவிட்சன் ஃபேட் பாய், கவாஸாகி நிஞ்ஜா எச்2, டுகாட்டி 1098 மற்றும் யமஹா ஆர்டி350 போன்ற குறிப்பிடத்தக்க மாடல்களை உள்ளடக்கிய 50க்கும் மேற்பட்ட பைக்குகளின் கலெக்ஷனை தோனி வைத்துள்ளார். அந்த வீடியோ கிளிப்பில், பிரசாத் பைக் மீதான தோனியின் ஆர்வத்தைப் பாராட்டியதோடு, அவரது ரசிகர்களுக்கு அவற்றை காண்பிக்க விரும்பி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.