மேலும் அறிய

Watch video: சாமர்த்தியமா..? சந்தர்ப்பமா..? இந்தியாவை வெற்றி பெற வைத்த தீப்தியின் "மன்கட்"..! வலுக்கும் எதிர்ப்பும், ஆதரவும்..!

தீப்தி சர்மா செய்தது சரிதான் என்று இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், அஸ்வின் உள்பட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரின் 3வது மற்றும் கடைசி போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக மன்கட் முறையில் தீப்தி சர்மா எடுத்த விக்கெட் அமைந்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 169 ரன்கள் குவித்த நிலையில்,  இங்கிலாந்து அணி 118 ரன்கள் எடுப்பதற்கும் 9 விக்கெட்களை இழந்தது. கடைசி விக்கெட்டை விடாமல் சார்லோட் டீன் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். வெற்றிக்கு 17 ரன்கள் தேவையென இருந்த நிலையில் சார்லோட் டீன் விக்கெட்டை எடுக்கமுடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் தடுமாறினர். அந்த நேரத்தில் மன்கட் முறையில் தீப்தி ஷர்மாவால் சார்லோட் டீன் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

வெற்றியின் விளிம்பில் இருந்த இங்கிலாந்து அணி இந்த தோல்வியால் மிகுந்த வேதனையடைந்தது. இங்கிலாந்து கேப்டன் எமி ஜோன்ஸ் போட்டியிலேயே இதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், அவுட் ஆன சார்லோட் டீன் மைதானத்திலேயே கண்ணீர் விட்டது அனைவரையும் உருக்கியது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐசிசி சார்பில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், பந்து வீச்சாளர் பந்து வீசும்போது நான் - ஸ்ட்ரைக்கர் கோட்டை தாண்டி வெளியேறக் கூடாது. மீறினால் பந்து வீச்சாளர் அவுட் செய்யும்போது அது ரன் அவுட் முறையில் கணக்கெடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவித்தது. மேலும், இந்த நடைமுறை வருகிற அக்டோபர் 1 ம் தேதி முதல் சர்வதேச போட்டிகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்தது. 

இந்தநிலையில், தீப்தி சர்மா செய்தது சரிதான் என்று இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், அஸ்வின் உள்பட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், தீப்தி சர்மா செய்தது தவறு என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

அஸ்வின் ட்வீட்:

எதற்காக இன்று அஸ்வினை ட்ரெண்ட் செய்கிறீர்கள். இன்றைய இரவின் பவுலிங் ஹீரோ தீப்தி ஷர்மா என்று கூறி அவரை டேக் செய்து இருந்தார். அவரை ஹீரோ என்று கூறியதன் மூலம் அஸ்வின் அவரை சப்போர்ட் செய்கிறார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர். 

ஸ்டூவர்ட் பிராட் ட்வீட்:

மான்கட் விவாதம் எனக்கு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. இருபுறமும் பல காட்சிகள். நான் தனிப்பட்ட முறையில் அது போன்ற ஒரு போட்டியில் வெற்றி பெற விரும்பவில்லை, மேலும், மற்றவர்கள் வித்தியாசமாக உணருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிவிட்டிருந்தார். 

தலைப்பு செய்திகள்

DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Embed widget