Virat Kohli: என்னுடைய பெஸ்ட் வெர்ஷனாக இருக்க விரும்புகிறேன்; மனம் திறந்த நாயகன் விராட்
Virat Kohli: தனது 71வது சர்வதேச சதத்தினை அடித்து கம்பேக் கொடுத்த விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார். அவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Virat Kohli; இந்திய அளவில் மட்டும் இல்லாமல் சர்வதேச அளவிலும் அறியப்படுபவர், அதிரடி ஆட்டத்திற்கு பெயர்போன ரன்மெஷின் விராட் கோலி. தன்னுடைய க்ளாசிக் கவ்ர் ட்ரைவ் ஷாட்டால் பல இளைஞர்களுக்கு கிரிக்கெட் மீது ஆர்வத்தினை ஏற்படுத்தியவர். கடந்த மூன்று ஆண்டுகளாக அவுட் ஆஃப் பார்மில் இருந்தார். இதனால் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகிக்கொண்டார். இதானால் தனி மன வருத்தத்தில் இருந்து வந்த விராட் கோலி, எதிர் வரும் உலககோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம் பெறுவதே சந்தேகம் என பலராலும் பேசப்பட்டு வந்தது.
“I wanted to be the best version of myself.”
— ICC (@ICC) September 9, 2022
Virat Kohli on his landmark century and a memorable comeback 👉 https://t.co/PyeXXtebpq#AsiaCup2022 | #INDvAFG pic.twitter.com/RSxuq9mncM
இந்நிலையில், நேற்று (08/009/2022) நடந்த ஆசிய கோப்பை போட்டித் தொடரில், சூப்பர் ஃபோர் (super 4) சுற்றில் ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மோதியது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய விராட் கோலி சர்வதேச டி20 போட்டியில் தனது முதல் சதத்தினை விளாசினார். இதில் 61 பந்துகளில் 122 ரன்கள் விளாசி நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். மேலும், சர்வதேச முத்தரப்பு போட்டியில் மொத்தம் 71 சதங்களையும் அடித்துள்ளார். சர்வதேச டி20 போட்டியில் 3500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். மேலும், ஐசிசி டி20 போட்டியில் 100 சிக்ஸர்களுக்கு மேல் அடித்த சாதனையையும் இந்த போட்டியில் தான் பெற்றார்.
சதம் அடித்த விராட்கோலி மைதானத்தில் மிகவும் மகிழ்ச்சியாக சிரித்ததும், ரசிகர்கள் அப்படியான சிரிப்பை பார்த்தும் பல நாட்கள் ஆகிவிட்டன. இவரது இந்த சதத்தினை இவர் மட்டும் இல்லாமல், உலகம் முழுவதும் உள்ள இவரது ரசிகர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
சதம் அடித்த பிறகு விராட் பேசியதாவது, நான் எப்போதும் என்னுடைய பெஸ்ட் வெர்ஷனில் இருக்க விரும்புகிறேன். அப்படித்தான் அணிக்கும் இருக்க விரும்புகிறேன். நான் இங்கு வந்து வலைப்பயிற்சியில் ஈடுபடத் தொடங்கியதில் இருந்து என்னுடைய ரிதத்தினை மீண்டும் உணர ஆரம்பித்துவிட்டேன். அந்த ரிதம் தான் என்னுடைய இந்த ஆட்டத்திற்கு காரணம். இந்த சதத்தினை என்னுடைய மனைவிக்கும் குழந்தைக்கும் சமர்ப்பிக்கிறேன் என கூறினார். என்னுடைய இக்கட்டான சூழலில் எனக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய அணிக்கு நன்றி எனவும் தெரிவித்தார். இந்த போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விராட்கோலி இதுவரை இந்திய அணிக்காக 104 டி20 போட்டிகளில் ஆடி 1 சதம், 32 அரைசதங்கள் உள்பட 3 ஆயிரத்து 584 ரன்களை விளாசியுள்ளார். 262 ஒருநாள் போட்டிகளில் ஆடி 43 சதங்கள், 64 அரைசதங்கள் உள்பட 12 ஆயிரத்து 344 ரன்களை விளாசியுள்ளார். 102 டெஸ்ட் போட்டிகளில் 27 சதங்கள், 7 இரட்டை சதங்கள், 28 அரைசதங்கள் உள்பட 8 ஆயிரத்து 74 ரன்களை விளாசி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.