Watch Video:"சேட்ட புடிச்ச பையன் சார்" - ஓடும் பேனை ஒற்றை கையில் நிறுத்திய தவான்! வைரல் வீடியோ
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஷிகர் தவான் சேட்டை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், சமூக வலைதளங்களில் தனது பதிவுகள் மூலம் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கப்பர் சிங் என்று அழைக்கப்படும் ஷிகர் தவான், மைதானத்தில் விளையாடும் போது கூட நிறைய வேடிக்கையான வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
தற்போது களத்திற்கு வெளியேயும் அவர் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். வட கர்நாடகாவின் புகழ்பெற்ற அதிசய பாப்பா லட்டு முத்யாவை இமிடேட் செய்யும் தவான், கன்னட பாடல் மூலம் நவீன லட்டு முத்யா பாபாவை கேலி செய்துள்ளார்.
வைரல் வீடியோ:
பாகல்கோட்டின் பாபா லட்டு முத்யாவுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். இவரை நகைச்சுவை மூலம் கலாய்க்கும் விதமாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது சுழலும் மின்விசிறியை கையால் நிறுத்துவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், நாற்காலியில் அமர்ந்திருந்த ஷிகர் தவானை 3 பேர் தூக்கிச் செல்கின்றனர்.
View this post on Instagram
அப்போது மெதுவாக சுழலும் மின்விசிறியை தவான் கையால் நிறுத்தினார். இதற்குப் பிறகு அவர் இரண்டு பேரை தன் மீது சாய்த்து ஆசீர்வதிப்பதைக் காணலாம். இந்த வீடியோவுடன் ஷிகர் தவான், "பங்கா வாலே பாபா கி ஜெய் ஹோ" என்ற தலைப்பைக் கொடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.