UPW-W vs DC-W Live: அதிரடியாக விளையாடிய டெல்லி அணி; 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி..!
UPW-W vs DC-W, WPL 2023 LIVE Score: மகளிர் பிரிமியர் லீக்கில் உத்தர பிரதேச வாரியர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ்க்கு இடையிலான லீக் போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
LIVE
Background
UPW-W vs DC-W, WPL 2023 LIVE Score: மகளிர் பிரிமியர் லீக்கில் உத்தர பிரதேச வாரியர்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையிலான லீக் போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள். இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு முதல் முதலாக தொடங்கப்பட்ட மகளிர் பிரிமியர் லீக்கின் தற்போது கிட்டத்தட்ட இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகளே மீதமுள்ள நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் உத்தர பிரதேச வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (மார்ச், 21) மும்பையில் உள்ள பிராபவுர்ணி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் மெக் லேனிங் பந்து வீச முடிவு செய்தார்.
டெல்லி அணி வெற்றி..!
இறுதியில் டெல்லி அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
11 ஓவர்கள் முடிவில்..!
11 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 97 ரன்கள் சேர்த்துள்ளனர்.
பவர்ப்ளே முடிவில்..!
பவர்ப்ளே முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் டெல்லி அணி சேத்துள்ளது.
விக்கெட்..!
சிறப்பாக விளையாடி வந்த ஷேஃபாலி வர்மா 16 பந்தில் 21 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறியுள்ளார்.
20 ஓவர்கள் முடிவில்..!
20 ஓவர்கள் முடிவில் உ.பி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் சேர்த்துள்ளது.