U19 WC: அபாரம்! U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறி அசத்தியுள்ளது.
19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியாவும், தென்னாப்பிரிக்கா அணியும் மோதின.
உலகக்கோப்பை அரையிறுதி:
இதில், முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணிக்கு ப்ரெட்டோரியஸ் சிறப்பாக ஆடினார். ஆனால், ஸ்டீவ் ஸ்டோக் 14 ரன்னிலும், டேவிட் டீகர் டக் அவுட்டானர். அடுத்து வந்த ரிச்சர்ட் தொடக்க வீரர் ப்ரெட்டோரியசுடன் ஜோடி சேர்ந்து அபாரமாக ஆடினார். இருவரும் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தனர். ப்ரெட்டோரியஸ் 76 ரன்களும், ரிச்சர்ட் 64 ரன்களும் அடித்து அவுட்டானார்கள். இதனால், தென்னாப்பிரிக்க தடுமாறியது. கடைசியில் 50 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்தது.
அதிர்ச்சி தொடக்கம்:
255 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஆதர்ஷ் சிங் முதல் பந்திலே டக் அவுட்டானார். அடுத்து வந்த அதிரடி வீரர் முஷீர்கான் 4 ரன்களுக்கு ஆல் அவுட்டானார். சிறிது நேரத்தில் குல்கர்னி 12 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து வந்த பிரியன்ஷி மோலியா 5 ரன்களுக்கு அவுட்டானார்.
உதய் - சச்சின் அபாரம்:
32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணிக்கு கேப்டன் உதய் சாஹரன் – சச்சின் தாஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து அபாரமாக ஆடினார். சச்சின் தாஸ் விறுவிறுவென்று ரன்களை சேர்க்க உதய் சாஹரன் நிதானமாக ஆடினார். இதனால் இந்திய அணி இலக்கை நோக்கி மெல்ல மெல்ல முன்னேறியது.
அபாரமாக ஆடிய சச்சின் தாஸ் சதத்தை நோக்கி முன்னேறினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் அவுட்டானார். அவர் 95 பந்துகளில் 11 பவுண்டரி 1 சிக்ஸருடன் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் அவனிஷ் 10 ரன்களில் அவுட்டாக, முருகன் அபிஷேக் டக் அவுட்டானார். இதனால், கடைசி நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், மறுமுனையில் அபாரமாக ஆடிய கேப்டன் உதய் அணியை இலக்கை நோக்கி முன்னேற வைத்தார். ராஜ் லிம்பானி வந்த வேகத்தில் சிக்ஸர், பவுண்டரி விளாசி வெற்றி பெற 1 ரன் தேவைப்பட்ட நிலையில் கேப்டன் 124 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்:
கடைசியில் இந்திய அணி 48.5 ஓவர்களில் 248 ரன்கள் விளாசி 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணியும் விளையாட உள்ளது.