Trent Boult: டி20 உலகக் கோப்பையில் குரூப் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து அணி.. ஓய்வை அறிவித்த ட்ரெண்ட் போல்ட்..!
Trent Boult: நேற்று, உகாண்டாவுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, டிரெண்ட் போல்ட் இது தனது கடைசி டி20 உலகக் கோப்பை என்று தெரிவித்தார்.
தற்போது நடைபெற்று வரும் 2024 டி20 உலகக் கோப்பையில் கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, குரூப் டேஜில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது. இதன் காரணமாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற முடியான நிலை ஏற்பட்டது. குரூப் சியில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2ல் தோல்வியை சந்தித்துள்ளது.
நியூசிலாந்தின் ஏமாற்றத்திற்கு பிறகு, அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட், டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். நேற்று, உகாண்டாவுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, டிரெண்ட் போல்ட் இது தனது கடைசி டி20 உலகக் கோப்பை என்று தெரிவித்தார். இதனால், 2026 டி20 உலகக் கோப்பையில் போல்ட் விளையாட மாட்டார் என்பது தெளிவாகியுள்ளது.
Trent Boult will be playing his final T20 World Cup match for New Zealand on 17th June. 🏆 pic.twitter.com/c2BU5QcORt
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 15, 2024
நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி:
நேற்று காலை உகாண்டா அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி தோற்கடித்தது. போட்டியின் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் நியூசிலாந்து பந்துவீச்சாளர் போல்ட் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், “ நான் என்னை பற்றி பேசினால், இது எனது கடைசி டி20 உலகக் கோப்பையாக இருக்கும். இந்த டி20 உலகக் கோப்பையில் நாங்கள் விரும்பிய தொடக்கத்தை கொடுக்கவில்லை. சூப்பர் 8 சுற்றுகளில் இருந்து வெளியேறியது ஜீரணிக்க முடியாத ஒன்று. எங்களால் முன்னேற முடியாமல் போனதில் நாங்கள் ஏமாற்றம் அடைகிறோம். ஆனால், நீங்கள் உங்களுக்காக கிடைக்கும்போதெல்லாம் அது பெருமையான தருணம். கடந்த பல ஆண்டுகளாக எங்களின் பதிவுகள் சிறப்பாக உள்ளன. துரதிர்ஷ்டவசமாக, கடந்த வாரம் எங்களால் சிறப்பாக விளையாட முடியவில்லை ” என தெரிவித்தார்.
டி20 உலகக் கோப்பையில் 2014 முதல் ஒவ்வொரு முறையும் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2024 டி20 உலகக் கோப்பையில் போல்ட்டின் செயல்திறன்:
2024 டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட், இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 6.42 சராசரி மற்றும் 3.75 என்ற பொருளாதாரத்தில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 3/16 தற்போதைய போட்டியில் இதுவே அவரது சிறந்த பந்துவீச்சாகும். நியூசிலாந்து தனது குரூப் கடைசி ஆட்டத்தில் பப்புவா நியூ கினியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் (நாளை) திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
இதுவரை நடந்த டி20 உலகக் கோப்பையில் போல்ட் எப்படி..?
டி20 உலகக் கோப்பையில் இதுவரை 17 போட்டிகளில் விளையாடியுள்ள டிரெண்ட் போல்ட், 17 இன்னிங்ஸில் 12.84 சராசரி மற்றும் 6.07 என்ற பொருளாதாரத்தில் 32 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். நியூசிலாந்து அணிக்காக போல்ட் முதன்முதலில் 2014 இல் டி20 உலகக் கோப்பையில் விளையாடினார்.
மேலும், டிரெண்ட் போல்ட் இதுவடை 60 சர்வதேச டி20 போட்டிகளில் 81 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த காலகட்டத்தில், சராசரி 21.79 ஆகவும், பொருளாதாரம் 7.75 ஆகவும் இருந்துள்ளது.
ட்ரெண்ட் போல்ட் நியூசிலாந்து அணிக்காக 2011ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமானார். அறிமுகமானதில் இருந்து நியூசிலாந்து அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்து வருகிறது. இவர் நியூசிலாந்து அணிக்காக டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளது.