மேலும் அறிய

INDvsPAK: பாகிஸ்தானை பந்தாடிய இந்திய வீரர்கள்..! யார் அந்த டாப் 5 ப்ளேயர்ஸ்...?

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றாலே விறுவிறுப்புக்கு எப்போதுமே பஞ்சமிருக்காது.

கிரிக்கெட் போட்டிகளில் சில அணிகள் மோதிக்கொண்டால் மட்டும் எப்போதும் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். அந்த வரிசையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி என்றால் உச்சகட்ட பரபரப்பு தொற்றிக்கொள்ளும். அடுத்த 2 மாதத்திற்கு இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் அடிக்கடி அரங்கேறப்போவது ரசிகர்களுக்கு படு குஷியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய கோப்பை, உலகக்கோப்பை என மிகப்பெரிய தொடர்களில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோத உள்ளன. இந்த சூழலில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 இந்திய வீரர்கள் யார் என்பதை கீழே காணலாம்.

  1. யுவராஜ் சிங்:

பாகிஸ்தான் அணிக்கு எதிராக எப்போதும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர் யுவராஜ்சிங். இவர் இந்த பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மட்டும் 38 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 1360 ரன்கள் எடுத்துள்ளார். இதில்  1 சதமும், 12 அரைசதங்களும் அடங்கும். பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனது பேட்டிங் சராசரியாக 42.50 வைத்துள்ளார்.

  1. சவ்ரவ் கங்குலி:

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி என்றாலே பாகிஸ்தான் அணிக்கு கிலி ஏற்பட்டு விடும். இவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 53 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1652 ரன்கள் விளாசியுள்ளார்.  பாகிஸ்தான் அணிக்கு எதிராக அசத்தலான 2 சதங்கள், 9 அரைசதங்களை விளாசியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான அவரது சராசரி 35.14 ஆகும்.

  1. முகமது அசாருதின்:

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதின் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் இதுவரை 64 ஒருநாள் போட்டிகள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆடி 1657 ரன்கள் விளாசியுள்ளார். அவர் 2 சதங்களும், 9 அரைசதங்களும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளாசியுள்ளார். இந்த பட்டியலில் அவர் 3வது இடத்தில் உள்ளார்.

    2.ராகுல் டிராவிட்:

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மட்டும் 58 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2 சதங்கள், 14 அரைசதங்கள் உள்பட 1899 ரன்களை விளாசியுள்ளார். அவரது பேட்டிங் சராசரி 36.51 ஆகும்.

   1.சச்சின் டெண்டுல்கர்:

பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் எந்த சந்தேகமும் இல்லாமல் கிரிக்கெட் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரே முதலிடத்தில் உள்ளார். அவர் 69 ஒருநாள் போட்டிகள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆடி 2 ஆயிரத்து 526 ரன்கள் விளாசியுள்ளார். அதில் 5 சதங்களும், 16 அரைசதங்களும் அடங்கும். 40.09 ரன்கள் சராசரியாக வைத்துள்ள அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனது அதிகபட்சமாக 141 ரன்களை விளாசியுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!
Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!
Manickam Tagore: 2006ல் விட்டது தப்பு.. ஆட்சியில் பங்கு கேட்டு முதல்வரை சீண்டிய மாணிக்கம் தாகூர் எம்.பி.,
Manickam Tagore: 2006ல் விட்டது தப்பு.. ஆட்சியில் பங்கு கேட்டு முதல்வரை சீண்டிய மாணிக்கம் தாகூர் எம்.பி.,
”ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது.!” காங்கிரஸ் ஆசைக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்
”ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது.!” காங்கிரஸ் ஆசைக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்
Pattimandram Raja: செட்டியாரா? செட்டிநாடா? போஸ்டால் வெடித்த சர்ச்சை - பட்டிமன்றம் ராஜா கொடுத்த விளக்கம்
Pattimandram Raja: செட்டியாரா? செட்டிநாடா? போஸ்டால் வெடித்த சர்ச்சை - பட்டிமன்றம் ராஜா கொடுத்த விளக்கம்
ABP Premium

வீடியோ

MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |
Pattimandram Raja Caste Controversy | ’’நீங்க என்ன ஆளுங்க?’’பெண்ணிடம் சாதியைக் கேட்ட பட்டிமன்ற ராஜா
Annamalai RSS meeting | ”உங்ககிட்ட PLAN-ஏ இல்ல” ஓபனாக கேட்ட அண்ணாமலை! புது பதவி கொடுக்கும் பாஜக
13 year boy austin |குடும்பத்தை காப்பாற்ற கடலில்குதித்த 13 வயது சிறுவன் ஆஸ்டின் நெகிழ்ச்சி பேட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!
Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!
Manickam Tagore: 2006ல் விட்டது தப்பு.. ஆட்சியில் பங்கு கேட்டு முதல்வரை சீண்டிய மாணிக்கம் தாகூர் எம்.பி.,
Manickam Tagore: 2006ல் விட்டது தப்பு.. ஆட்சியில் பங்கு கேட்டு முதல்வரை சீண்டிய மாணிக்கம் தாகூர் எம்.பி.,
”ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது.!” காங்கிரஸ் ஆசைக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்
”ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது.!” காங்கிரஸ் ஆசைக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்
Pattimandram Raja: செட்டியாரா? செட்டிநாடா? போஸ்டால் வெடித்த சர்ச்சை - பட்டிமன்றம் ராஜா கொடுத்த விளக்கம்
Pattimandram Raja: செட்டியாரா? செட்டிநாடா? போஸ்டால் வெடித்த சர்ச்சை - பட்டிமன்றம் ராஜா கொடுத்த விளக்கம்
Sierra Vs Seltos: ஹைப் ஏத்தி மொக்கை வாங்கிய சியாரா..! சிம்பிளா சம்பவம் செய்த செல்டோஸ் - கியா சாதித்தது எப்படி?
Sierra Vs Seltos: ஹைப் ஏத்தி மொக்கை வாங்கிய சியாரா..! சிம்பிளா சம்பவம் செய்த செல்டோஸ் - கியா சாதித்தது எப்படி?
DMK: வெயிட்டிங் ஓவர்..! பிப். 22 முதல் அறிவாலயத்துக்கு வாங்க - தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - திமுக அறிவிப்பு
DMK: வெயிட்டிங் ஓவர்..! பிப். 22 முதல் அறிவாலயத்துக்கு வாங்க - தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - திமுக அறிவிப்பு
Toyota Urban Cruiser Ebella Review: டொயோட்டா அர்பன் க்ரூஸர் எபெல்லா எப்படி இருக்கு.? பிடித்தவை, பிடிக்காதவை என்ன.? விமர்சனம் இதோ
டொயோட்டா அர்பன் க்ரூஸர் எபெல்லா எப்படி இருக்கு.? பிடித்தவை, பிடிக்காதவை என்ன.? விமர்சனம் இதோ
Taigun vs Creta Vs Seltos: ஹுண்டாய் க்ரெட்டா VS கியா செல்டோஸ் VS ஃபோக்ஸ்வாகன் டைகுன்; மிட் சைஸ் SUV-ல் எது பெஸ்ட்.?
ஹுண்டாய் க்ரெட்டா VS கியா செல்டோஸ் VS ஃபோக்ஸ்வாகன் டைகுன்; மிட் சைஸ் SUV-ல் எது பெஸ்ட்.?
Embed widget