Watch Video: "சாவடிச்சுருவேன்" - தனது அணி வீரரை திட்டிய கேப்டன் அஸ்வின் - ஏன் தெரியுமா?
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் கேப்டன் அஸ்வின் தனது அணி வீரரை சாவடிச்சுருவேன் என்று திட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய அளவில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவது போல தமிழ்நாட்டு அளவில் டி.என்.பி.எல். தொடர் நடத்தப்படுகிறது. விறுவிறுப்பாக நடைபெறும் இந்த தொடர் இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. இந்த தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனாக அஸ்வின் ஆடி வருகிறார்.
சாவடிச்சுருவேன்:
திண்டுக்கல்லில் உள்ள மைதானத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கும் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் 159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியபோது திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் அபாரமாக ஆடினார். அவர் 35 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 57 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அடுத்து பாபா இந்திரஜித் டக் அவுட்டாக, பூபதி குமார் 1 ரன்னில் அவுட்டானார். இதனால், அடுத்து வந்த சரத்குமாரை நிதானமாக ஆடுமாறு அஸ்வின் அறிவுறுத்தினார். ஆனால், அவர் பந்தை தூக்கி கேட்ச்சுக்கு கொடுத்தார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் அந்த கேட்ச்சை தவறவிட்டார். அப்போது, பெவிலியனில் இருந்த அஸ்வின் சரத்குமாரை பார்த்து "சாவடிச்சுருவேன்.. அப்படியே போயிடு" என்று கூறுகிறார். இது அனைத்தும் கேமராவில் பதிவாகியுள்ளது.
Twitter is not ready for Another Kohli 😂 #TNPL #Ashwin pic.twitter.com/1e9T7syqyt
— rj facts (@rj_rr1) August 1, 2024
இறுதிப்போட்டிக்குச் செல்லுமா திண்டுக்கல்?
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டியில் ஒரு பந்து மீதம் வைத்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது. சுபோத் பாதி 12 பந்துகளில் ஒரு சிக்ஸருடன் 14 ரன்களும், தினேஷ் ராஜ் 4 ரன்களும் எடுத்து கடைசியில் அணியை வெற்றி பெற வைத்தனர். முன்னதாக, முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸின் சந்தோஷ்குமார் 1 ரன்னிலும், ஜெகதீஷ் 25 ரன்களிலும் ஆட்டமிழக்க கேப்டன் அபராஜித் 72 ரன்கள் எடுத்தார். கடைசியில் அபிஷேக் தன்வர் 22 ரன்கள் எடுக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 158 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் அணியில் அஸ்வினுக்கு நன்றாக ஒத்துழைப்பு தந்த ஷிவம் சிங் 49 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 64 ரன்கள் எடுத்தார். அந்த போட்டியில் அதிரடியாக ஆடிய அஸ்வினுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
எலிமினேட்டரில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இன்று நடக்கும் குவாலிபயர் 2 ஆட்டத்தில் திருப்பூருடன் திண்டுக்கல் அணி மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை சேப்பாக்கம் மைதானத்தில் கோவை அணியுடன் இறுதிப்போட்டியில் மோதுகிறது.