மேலும் அறிய

TNPL 2024: 16 ரன்கள் வித்தியாசம்! திருச்சி அணியை வீழ்த்தி திண்டுக்கல் அபார வெற்றி!

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய சிவம் சிங் 51 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

டிஎன்பிஎல் இரண்டாவது போட்டி இன்று சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடன், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி பில்டிங்கை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸ்:

திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சிவம் சிங் களமிறங்கினர். திண்டுக்கல் டிராகன் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய சிவம் சிங் 38 பந்துகளில் அரை சதம் அடித்தார். இது அவரது ஐந்தாவது டிஎன்பிஎல் அரைசிதம் ஆகும்.

மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபா இந்திரஜித் 28 பந்துகளில் 33 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். அதிரடியாக விளையாடிய சிவம் சிங் 51 பந்துகளில் 78 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன் பிறகு களம் இறங்கிய திண்டுக்கல் டிராகன் அணியின் வீரர்கள் ஒற்றை இழக்க ரன்களில் தங்களது விக்கெட்டை பறி கொடுத்தனர். 

TNPL 2024: 16 ரன்கள் வித்தியாசம்! திருச்சி அணியை வீழ்த்தி திண்டுக்கல் அபார வெற்றி!

ஈஸ்வரன் ஹாட்ரிக் விக்கெட்:

சிறப்பாக பந்து வீசிய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஈஸ்வரன் நான்கு ஓவர்களில் 6 விக்கெட்டுகள் எடுத்தார். இதன் மூலம் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை ஈஸ்வரன் பெற்றார். மேலும், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியின் வீரர் ஈஸ்வரன் தனது முதல் ஹார்ட்ரிக் விக்கெட்டையும் எடுத்துள்ளார். தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியின் வீரர்கள் சரவண குமார் மற்றும் அதிசயராஜ் தல ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

திருச்சி அணிக்கு 161 இலக்கு:

20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் டிராகன் அணி எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. பொறுமையாக விளையாடி ரன்களை குவித்த திண்டுக்கல் டிராகன் அணியின் வீரர் பூபதி 16 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு 161 ரன்கள் இழக்காக நிர்ணயிக்கப்பட்டது.

TNPL 2024: 16 ரன்கள் வித்தியாசம்! திருச்சி அணியை வீழ்த்தி திண்டுக்கல் அபார வெற்றி!

இரண்டாவது இன்னிங்ஸ்: 

போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கிய திருச்சி அணியின் தொடக்க வீரர் வாஷிங் அகமது 6 ரன்களுக்கு ஆட்டம் நடந்தார். மற்றொருபுறம் களமிறங்கிய அர்ஜுன் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 பந்துகளில் 18 ரன்கள் இருந்தபோது வருண் சக்கரவர்த்தியின் முதல் ஓவரில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து திண்டுக்கல் அணியின் சுழற் பந்துவீச்சில் திருச்சி அணி வீரர்கள் திணறினார்.

திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் 4 ஓவர்களுக்கு 18 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ச்சியாக திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியின் வீரர்கள் குறைந்த ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். அதிரடியாக விளையாடிய திருச்சி வீரர் ராஜ்குமார் 17 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதினை 78 ரன்களை குவித்த திண்டுக்கல் வீரர் சிவன் சிங்கக்கு வழங்கப்பட்டது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Embed widget