Watch Video: கேட்ச்சு! கேட்ச்சு! மேலே எகிறிய பந்து.. மூன்று ஃபீல்டர்கள் கோட்டைவிட்டு போச்சு.. வைரலாகும் வீடியோ!
தமிழ்நாடு பிரிமீயர் லீக் 2023 தொடரில் மூன்று வீரர்கள் சேர்ந்து கேட்ச் டிராப் செய்த வீடியோ இணையத்தில் தற்போது மிகப்பெரிய அளவில் ட்ரெண்ட்.
பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் மற்றும் ஷோயப் மாலிக் ஆகியோர் 2008ம் ஆண்டு ஒன்றாக இணைந்து கேட்ச் விட்டதை நம்மால் இன்னும் மறக்க முடியாது. சயீத் மற்றும் ஷோயப் ஆகியோரின் அந்த கேட்ச் டிராப் குறித்து சமூக ஊடகங்களில் நிறைய மீம்ஸ்கள் இன்றளவு ட்ரெண்டாகி வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அந்த காலம் முதல் இந்த காலம் வரை கேட்ச் டிராப் மற்றும் ரன் அவுட்டுக்கு பெயர் போன்றவர்கள் என்ற கருத்து இருந்து வருகிறது. இப்படி ஒருபுறம் இருக்கம் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 2023 தொடரில் இதேபோன்ற கேட்ச் டிராப் செய்த வீடியோ இணையத்தில் தற்போது மிகப்பெரிய அளவில் ட்ரெண்ட்.
Here😁 pic.twitter.com/w1TRRIQWlS
— Ripson Lobo (@Ripsylobo12) July 11, 2023
மூன்று பீல்டர்கள் கோட்டைவிட்ட கேட்ச்:
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 தொடரில் நெல்லை கிங்ஸ் அணி திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால், இந்தப் போட்டியில் ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்ஸ்மேன் சுபோத் பாடி ஒரு பெரிய ஷாட் ஆட முயன்றபோது பந்து பேட்டின் விளிம்பில் பட்டு மேலே ஏறியது. கேட்சை பிடிக்க கீப்பர் உட்பட மொத்தம் மூன்று பீல்டர்கள் சுத்து போட்டனர். இருப்பினும், அனைத்து பீல்டர்களும் இவர் பிடிப்பார், அவர் பிடிப்பார் என ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே இருக்க, கடைசி வரை யாரும் கேட்ச் எடுக்கவில்லை. இதன் காரணமாக மூன்று பீல்டர்களுக்கு இடையே பந்து விழுந்து சுபோத்துக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்தது.
Where have we seen this before? 😂
— FanCode (@FanCode) July 11, 2023
.
.#TNPLonFanCode pic.twitter.com/0i884TqTxB
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நெல்லை கிங்ஸ் அணி:
நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் நேற்று முன்தினம் குவாலிபையர்-2 போட்டியில் மோதியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சிவம் சிங் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 76 ரன்கள் குவித்தார். ரன்களை துரத்த வந்த நெல்லை ராயல் கிங்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியில் அஜிதேஷ் குருசாமி 44 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் குவித்தார்.