மேலும் அறிய
Advertisement
Sai Sudharsan: "மைக் ஹசி போல் விளையாட வேண்டும்” - கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் மைக் ஹசி போன்று தானும் வரவேண்டும் என தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் ஓப்பன் டாக்
சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 96 ரன்கள் குவித்தார். இந்த நிலையில் கோவையில் நடைபெற உள்ள தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக சாய் சுதர்சன் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டு சென்றார்.
அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணி தன்னை ஏலத்தில் எடுத்துள்ளது. நான் தொடர்ந்து குஜராத் அணிக்காக விளையாடுவேன். இப்போதைக்கு அதுதான் எனது அணி. ஐபிஎல் 2023 சென்னை உடனான இறுதி போட்டியில் குஜராத் அணிதான் வெல்லும் என நினைத்தோம். ஆனால் கடைசி நிமிடத்தில் தோல்வி அடைந்தோம். அடுத்த ஆண்டு இன்னும் பலத்துடன் மீண்டு வருவோம். தற்போது நடைபெற உள்ள தமிழ்நாடு பிரிமியர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறேன்.
கருத்து சொல்ல விரும்பவில்லை
உலக டெஸ்ட் கிரிக்கெட் இறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் பவுலரான அஸ்வினை எடுக்கப்படாத குறித்து தான் கருத்து சொல்ல விரும்பவில்லை. சிறிய வயதில் இருந்து சென்னை கிரிக்கெட் அணியை பார்த்து வளர்ந்துள்ளோம். சென்னை அணியில் விளையாட வேண்டும் என்பது அனைவருக்கும் கனவாக இருக்கும் ஆனால் என்னை குஜராத் அணி தான் ஏலத்தில் எடுத்தது. அதுதான் தற்போது எனது அணி. நான் இந்த அளவுக்கு கிரிக்கெட் விளையாடுவதற்கு என் பெற்றோர் தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றனர். மேலும் தனது கடின பயிற்சியும், உழைப்பும் தான் காரணமாக உள்ளது. நமது திறமைக்கான வரவேற்பு கண்டிப்பாக கிடைக்கும். இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட ஆசைப்படுவோர் தொடர்ந்து முயற்சியுடன் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நான் விளையாடுவேனா என தெரியாது. எனது கிரிக்கெட்டை மேலும் மேம்படுத்துவதில் தனது குறிக்கோள் உள்ளது.
மைக் ஹசி
தான் அகமதாபாத்தில் விளையாடினாலும் தமிழர்கள் அங்கும் எனக்கு தொடர்ந்து ஆதரவளித்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டில் இருந்து தான் விலகி இருக்கவே விரும்புகிறேன். அதையே இளைஞர்களுக்கும் நான் கூறும் அட்வைஸாக ஏற்றுக் கொள்ளுங்கள். சிறிய வயதில் இருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் மைக் ஹசியின் பேட்டிங்கை ரசித்துள்ளேன். அவரிடம் நிறைய கற்றுக் கொண்டு உள்ளேன். அவரைப் போன்று தானும் வரவேண்டும் என்பது எனது ஆசை. தோனி உள்ளிட்ட முன்னாள் சீனியர் வீரர்களுடன் கலந்து உரையாடி உள்ளேன். நிறையே அறிவுரைகளை தனக்கு வழங்கி உள்ளனர். இந்திய அணிக்கு தகுதியாவது குறித்து இதுவரை எந்த பேச்சு வார்த்தையும் தன்னிடம் நடைபெறவில்லை. இவ்வாறு கூறினார்
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion