![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
TNPL 2023: ரன் அவுட்டை கோட்டைவிட்ட சேலம் - கிடைத்த வாய்ப்பில் ருத்ரதாண்டவமாடிய சுஜய்..!
TNPL 2023: சேலம் அணிக்கு எதிரான போட்டியில் கோவை அணியின் சுஜய் ரன் அவுட் செய்யப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
![TNPL 2023: ரன் அவுட்டை கோட்டைவிட்ட சேலம் - கிடைத்த வாய்ப்பில் ருத்ரதாண்டவமாடிய சுஜய்..! TNPL 2023 Lyca Kovai Kings Sujay Run Out Video Viral against Salem Spartans TNPL 2023: ரன் அவுட்டை கோட்டைவிட்ட சேலம் - கிடைத்த வாய்ப்பில் ருத்ரதாண்டவமாடிய சுஜய்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/28/2ef1a7bf69fbb6023274462635a0bf441687937132577102_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐபிஎல் தொடரை தொடர்ந்து தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதளவும் வரவேற்கப்படும் டிஎன்பிஎல் தொடரின் 7வது சீசன் கடந்த ஜூன் 12 ஆம் தேதி கோலகலமாக தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 18 போட்டிகள் நடந்த நிலையில் நேற்று நடந்த 19வது போட்டியில் கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. சேலம் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் கோவை அணி பேட்டிங் செய்தது. 15 ரன்னில் இருந்த போது கோவை அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. அதன் பின்னர், சுஜயுடன் சாய் சுதர்சன் இணைந்தார். இவர்களது கூட்டணி கோவை அணியை வலுவடையச் செய்தது. ஆனால், சேலம் அணி வீரரகளின் கவனக்குறைவால், சுஜயின் விக்கெட்டை கைப்பற்றமுடியாமல் போனது. அதாவது போட்டியின் மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ் குமார் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதே ஓவரின் 4வது பந்தில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுஜய் ரன் எடுக்க ஓடும்போது, கிரீஸ்க்கு அருகில் சென்று பேட்டை தரையில் வைக்காமல், கிரீஸ்க்குள் குதித்தார். ஆனால் அதற்குள் சேலம் அணி வீரர் ரன் -அவுட்டிற்கு வீசிய பந்து ஸ்டெம்பில் பட்டது. ரீப்ளேவில் சுஜய் அவுட் என்பது உறுதியாகத் தெரிந்தது. ஆனால், சேலம் அணி வீரர்கள் யாரும் மேல்முறையீடு செய்யாததால், சுஜய் தொடர்ந்து விளையாடி 44 ரன்கள் எடுத்த பின்னர் தான் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பாக சாய் சுதர்சன் 41 ரன்களும் எடுத்தனர். பின்னர் அதீர் உர் ரஹ்மான் 31, ராம் அரவிந்த் 50 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் கோவை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்தது.
Jump-லிங்கம் 😮
— Star Sports Tamil (@StarSportsTamil) June 27, 2023
📺 தொடர்ந்து காணுங்கள் | TNPL | #SSvsLKK | Star Sports தமிழில்#NammaOoruNammaGethu #TNPL #SS #LKK pic.twitter.com/9fvJRyllwj
தொடர்ந்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம் கண்ட சேலம் அணியில் எந்த வீரரும் பெரிய அளவிலாக ரன்களை அடிக்கவில்லை. அதிகப்பட்சமாக சன்னி சந்து 29, முகமது கான் 20, ஆகாஷ் சும்ரா 20 ரன்கள் எடுக்க 19 ஓவர்களில் சேலம் அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கோவை அணி தரப்பில் அதிகப்பட்சமாக கவுதம் தாமரைக் கண்ணன் 3 விக்கெட்டுகளும், ஷாருக் கான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.இதன்மூலம் கோவை கிங்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சேலம் அணி இந்த போட்டியில் தோல்வியைச் சந்திக்க சுஜய் ரன் அவுட் என்பது தான் காரணம் என சேலம் அணி ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த வெற்றியின் மூலம் கோவை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. அந்த அணி 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி, ஒரு தோல்வியுடன் 10 புள்ளிகளைப் பெற்றுள்ளது.இரண்டாவது இடத்தில் நெல்லை, 3வது இடத்தில் திண்டுக்கல், 4வது இடத்தில் சேப்பாக் அணியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)