Team India Squad: மீண்டும் ரவீந்திர ஜடேஜா இல்லாத அணி... வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய வீரர்கள் அறிவிப்பு
3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய, வங்க தேச அணிகள் மோத இருக்கின்றன.
இந்தியா - வங்கதேசம் இடையேயான ஒருநாள் போட்டித் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை தொடரின் அரை இறுதியில், இங்கிலாந்து அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி, தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
முன்னதாக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆடிய இந்திய அணி 1 - 0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் ஆட உள்ள இந்திய அணி அடுத்ததாக வங்கதேசம் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது.
அங்கு, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய, வங்க தேச அணிகள் மோத இருக்கின்றன. ஒருநாள் போட்டிகள் டிசம்பர் 4ஆம் தேதியும், டெஸ்ட் தொடர் டிசம்பர் 14ஆம் தேதியும் தொடங்கி அடுத்த மாதம் முழுவதும் நடைபெற உள்ளன.
இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இடம்பெறும் வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்களின் பட்டியல்
ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்க உள்ள இந்திய அணியில் கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஷிகார் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர் ), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர் ), ஷாபாஸ் அகமது, அக்சர் படேல், வாசிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் , முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
#TeamIndia for Bangladesh ODIs: Rohit Sharma(C), KL Rahul (VC), Shikhar Dhawan, Virat Kohli, Rajat Patidar, Shreyas Iyer, Rahul Tripathi, R Pant (WK), Ishan Kishan (WK), Shahbaz Ahmed, Axar Patel, W Sundar, Shardul Thakur, Mohd. Shami, Mohd. Siraj, Deepak Chahar, Kuldeep Sen.
— BCCI (@BCCI) November 23, 2022
இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, காலில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார். இதனால் டி20 உலகக்கோப்பையில் கூட அவர் ஆடவில்லை. ஜடேஜா போன்ற முக்கிய வீரர் இல்லாமல் இந்தியா டி20 உலக கோப்பையை சந்தித்தது, அதற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. தற்போதைய நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் ஜடேஜா இடம்பெறவில்லை. இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான அணியிலும் அவர் பெயர் இடம்பெறாதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.