Team India Squad: ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடர்... பிசிசிஐ அறிவித்த இந்திய அணி!
உலகக் கோப்பை டி20 தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக தற்போது ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்களுக்கு எதிரான டி 20 தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறியது. இதைத் தொடர்ந்து இந்திய அணி தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் விளையாட உள்ளது. முதலில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்குகிறது. அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில், உலகக் கோப்பை டி20 தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக தற்போது ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்களுக்கு எதிரான டி 20 தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது.
🚨 NEWS 🚨: India’s squads for ICC Men’s T20 World Cup 2022, Australia & South Africa T20Is announced. #TeamIndia | #T20WorldCup | #INDvAUS | #iNDvSA
— BCCI (@BCCI) September 12, 2022
More Details 🔽https://t.co/ZFaOXlmduN
ஆஸ்திரேலியா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது. ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், பும்ரா.
தென்னாப்பிரிக்கா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது. ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான சொந்தத் தொடரின் போது ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தங்களது உடல்நிலை குறித்த தகவலை தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அதேபோல், தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படவில்லை. ஆனால், இந்த தொடருக்கு இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தொடருக்கு முன்னதாக பிசிசிஐ ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது.
அதன் விவரம் :
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது. ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், பும்ரா.
காத்திருப்பு வீரர்கள் - முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்