Dinesh Karthik Run Out: விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ரன் அவுட் சர்ச்சை - நடுவரை விமர்சித்த இந்திய ரசிகர்கள்
உலகக் கோப்பை தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ரன் அவுட்டானது சர்ச்சைக்குள்ளானது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகக் கோப்பை தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ரன் அவுட்டானது சர்ச்சைக்குள்ளானது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை வங்காளதேசம் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் இந்தியா விளையாடியது. இந்த ஆட்டத்தில் ஹார்திக் பாண்டியா ஆட்டமிழந்ததை அடுத்து, விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். அப்போது விராட் கோலி விளையாடிக் கொண்டிருந்தார்.
ஷோரிஃபுல் இஸ்லாம் வீசிய ஓவரில் கடைசி பந்தை விராட் கோலி எக்ஸ்டிரா கவர் பகுதியில் அடித்து விட்டு ஓட முயன்றார். இதையடுத்து, மறுபக்கம் இருந்த தினேஷ் கார்த்திக் பாதி தூரம் வரை ஓடிவந்தார். எனினும், பந்து ஃபீல்டர் கைகளில் சென்றால் உடனடியாக கோலி ரன் ஓடாமல் தவிர்த்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத தினேஷ் கார்த்திக் பந்துவீசும் பக்கம் வேகமாக ஓடிவர முயன்றார். அதற்குள் ஷாகிப் பந்தை பந்துவீச்சாளர் ஷொரிஃபுல்லிடம் வீசினார். ரன் அவுட் செய்ய ஷொரிஃபுல் இஸ்லாம் முயன்றார்.
அப்போது ஸ்டம்பில் பந்து இல்லாமல் அவரது கைகளால் இடித்தார். இது மூன்றாவது நடுவரின் பார்வைக்கு சென்றது. எனினும், மூன்றாவது நடுவர் ரன் அவுட் கொடுத்தார். இது சர்ச்சையானது. இந்த வீடியோ பகிர்ந்து இந்திய நெட்டிசன்கள் பொரிந்து தள்ளினர்.
தினேஷ் கார்த்திக் 7 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இருப்பினும், இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
God ji plz chk the run out of Dinesh Karthik it's seem poor umpiring decision , sir when stumps were hit ball was not in his hands and he hit the stumps with his hands, ball has roll over on other side, sir plz chk pic.twitter.com/5HQzW239Ha
— Amit (@Amit_srt) November 2, 2022
இந்தியா-வங்காளதேசம் இடையே அடிலெய்டில் நடைபெற்ற 35ஆவது ஆட்டத்தில் வங்கதேசம் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் விளையாடியது. மழை காரணமாக ஓவர்கள் 16 ஆக குறைக்கப்பட்டது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஷான்டோ, லிட்டன் தாஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். லிட்டன் தாஸ் அதிவேகமாக 21 பந்துகளில் அரை சதம் விளாசினார்.
மழையால் பாதிப்பு
வங்காளதேசம் 7 ஓவர்களில் 66 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கீடு செய்தது. இதனால், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 78 பந்துகளில் அந்த அணி 119 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. 15 நிமிடங்களுக்கு மேல் மழை காரணமாக ஆட்டம் தடை பட்டது. மழை நின்ற பிறகு, மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அப்போது ஓவர்கள் குறைக்கப்பட்டது. 2ஆவது இன்னிங்ஸுக்கு மொத்தம் 16 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்டது.
9 ஓவர்களுக்கு 85 ரன்கள் இலக்காக வங்காளதேசத்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டன. மொத்தம் 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. ஆட்டம் மீண்டும் தொடங்கியபோது லிட்டன் தாஸ் ரன் அவுட்டானார். அவரை கே.எல்.ராகுல் ரன் அவுட் செய்தார். அதைத் தொடர்ந்து பவுண்டரிகளை விளாசிய ஷான்டோ 21 ரன்கள் எடுத்திருந்தபோது முகமது ஷமி வீசிய பந்தில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
ஆஃபிப் ஹுசைன் 3 ரன்களில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் ஆனார். 13 ஆவது ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹார்திக் பாண்டியா. இந்தியாவின் ஃபீல்டிங்கும் சிறப்பானதாக இருந்தது. கடைசி ஓவரில் 1 பந்துக்கு 7 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.