மேலும் அறிய

Watch Video: ரோகித்தை பார்த்ததும் மைதானத்தில் அத்துமீறிய ரசிகர்! ஹாலிவுட் பாணியில் பிடித்த அமெரிக்க போலீஸ்

அமெரிக்காவில் நடைபெற்ற பயிற்சி போட்டியில் மைதானத்தில் அத்துமீறி ரோகித்சர்மாவை கட்டிப்பிடிக்க முயன்ற ரசிகரை அமெரிக்க போலீசார் ஹாலிவுட் பட ஸ்டைலில் தரையில் தள்ளி கைது செய்தனர்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் அனைத்தும் அமெரிக்கா சென்றுள்ளன. டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாக அனைத்து அணிகளுக்கும் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றது. இந்திய அணி நேற்று அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நடைபெற்றது.

அத்துமீறி நுழைந்த ரசிகர்:

இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 182 ரன்களை குவித்தது. இதையடுத்து, 183 ரன்கள் என்ற இலக்குடன் வங்கதேச அணி பேட்டிங் செய்தது. இந்திய அணி வீரர்கள் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தபோது, அப்போது ரசிகர் ஒருவர் திடீரென பாதுகாப்பு விதிகளை மீறி மைதானத்தின் உள்ளே நுழைந்தார்.

உள்ளே நுழைந்த ரசிகர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை நோக்கி ஓடி, அவருடன் கைகொடுக்க முயற்சி செய்தார். ரோகித்சர்மாவும் அவருடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். பாதுகாப்பு காரணங்கள் என்பதால் அமெரிக்க போலீசார் சட்டென்று மைதானத்தின் உள்ளே நுழைந்து, அந்த ரசிகரை கீழே தள்ளி அவரது இரண்டு கைகளையும் பின்னால் கட்டி கைது செய்தனர்.

அமெரிக்க போலீசுக்கு வேண்டுகோள் விடுத்த ரோகித்சர்மா:

அமெரிக்காவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவரை கீழே தள்ளி கைது செய்வது போல, அந்த ரசிகரை அமெரிக்க போலீசார் கைது செய்தனர். இதைக்கண்ட ரோகித் சர்மா அவரை அவ்வாறு நடத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும், அமெரிக்க போலீசார் பாதுகாப்பு காரணம் என்பதால் அந்த ரசிகரை சட்டென்று கைது செய்தனர்.

பின்னர், போட்டி நடுவர்களும் உள்ளே வந்து அமெரிக்க போலீசாரிடம் கூறி அந்த ரசிகரை அழைத்துச் சென்றனர். அமெரிக்காவில் முதன்முறையாக டி20 உலகக்கோப்பைத் தொடர் நடைபெறுவதாலும், பல முன்னணி கிரிக்கெட் அணிகள் பங்கேற்பதாலும் முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா வெற்றி:

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளிக்க, கேப்டன் ரோகித் சர்மா 19 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸர் அடித்து அசத்தினார். ரிஷப்பண்ட் 32 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்ஸர் அடித்து 53 ரன்கள் அடித்து அசத்தினார். கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா 23 பந்தகளில் 2 பவுண்டரி 4 சிக்ஸருடன் 40 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இதைத்தொடர்ந்து 183 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வங்கதேச அணி இந்திய பந்துவீச்சில் தடுமாறியது. தொடக்க வீரர் சவுமியா சர்கார் டக் அவுட்டானார். லிட்டன் தாஸ் 6 ரன்னில் அவுட்டாக, மற்றொரு தொடக்க வீரர் தன்ஷித் ஹாசன் 17 ரன்களில் அவுட்டானார். கேப்டன் ஷான்டோவும் டக் அவுட்டானார்.

அனுபவ வீரர்கள் ஷகிப் அல் ஹசன் – மகமுதுல்லா வங்கதேச அணிக்காக அபாரமாக ஆடினர். ஷகிப் அல் ஹசன் 28 ரன்களில் அவுட்டானார். மகமதுல்லா 28 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 40 ரன்களுக்கு ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார். 20 ஓவர்களில் வங்கதேச அணி வெறும் 122 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 

இந்திய அணியில் அர்ஷ்தீப்சிங், ஷிவம்துபே தலா 2 விக்கெட்டுகளையும், பும்ரா, முகமது சிராஜ், பாண்ட்யா, அக்‌ஷர் படேல், தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Embed widget